வரலாற்றில் முதல் முறை : மாண்டரின் மொழி நாவலான 'தைவான் டிராவலாக்' : புக்கர் பரிசு அறிவிப்பு!

புக்கர் பரிசு வரலாற்றில், மாண்டரின் சீன மொழியில் எழுதப்பட்ட நாவலுக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
For the first time in history, Mandarin-language novel 'Taiwan Travelogue' wins Booker Prize
For the first time in history, Mandarin-language novel 'Taiwan Travelogue' wins Booker Prize google
1 min read

புக்கர் பரிசின் பிண்ணனி

உலக அளவில் ஆங்கில இலக்கியப் புனைவுக்காக வழங்கப்படும் உயரிய விருதாக வழங்கப்படுவதுதான் புக்கர்பரிசு , இது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆங்கில இலக்கிய புனைவுகாக வழங்கப்படுகிறது

இந்தண்டிற்கான புக்கர் பரிசு

இந்த நிலையில் இந்தாண்டிற்கான புக்கர் பரிசு , 'தைவான் டிராவலாக்' என்ற நாவலுக்கு அறிவிக்கப்படுள்ளது.

மாண்டரின் சீன மொழி நாவல்

1930களில் ஜப்பான் ஆக்கிரமிப்பில் இருந்த தைவானின் பின்னணியில் காதல் மற்றும் காலனித்துவ அதிகாரத்தை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

மேலும் மாண்டரின் சீன மொழியில் எழுத்தப்பட்ட நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்தது இதுவே முத்ல் முறையாகும்

நாவலின் எழுத்தாளர் குறித்து

தைவான் எழுத்தாளர் யாங் சுவாங்-சி எழுதிய இந்த வரலாற்று நாவலை லின் கிங் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். புக்கர் பரிசு வரலாற்றில், மாண்டரின் சீன மொழியில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்த உயரிய விருதைப் பெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்

நாவலின் பிண்ணனி

இந்த இளம் எழுத்தாளர் தைவானுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஆதிக்க அரசியலில் ஆர்வம் இல்லாத அவர், தைவானின் உண்மையான கலாசாரத்தையும், அங்குள்ள பாரம்பர்ய உணவுகளையும் ருசிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

அவருக்கு வழிகாட்டியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் சிசுரு என்ற உள்ளூர் தைவானியப் பெண் நியமிக்கப்படுகிறார்.

அங்கு அவர் மேற்கொண்ட அனுபவங்களையும் , ஓர் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஜப்பானியப் பெண்ணுக்கும், அடிமைப்பட்டுக் கிடக்கும் உள்ளூர் தைவானியப் பெண்ணுக்கும் இடையிலான காதலில், அதிகாரம், மொழி எத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது என்பதையும் விவரிப்பதாக இந்த நாவல் அமைந்துள்ளது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in