சொந்த நாடு செல்ல புதிய அறிவிப்பு
US Announces $2,600 Incentive to Leave the Country : உரிய ஆவணங்கள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வசித்து வருபவர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தி வந்து கொண்டு இருந்தது ,
ஆனால் தற்போது இலவசமாக தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக இந்த திட்டத்தை அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலின் புகைப்படம் ,சர்ச்சை ?
சட்ட விரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் திட்டத்துக்கான அறிவிப்பில் தாஜ்மஹாலின் புகைப்படத்தை அந்தத் துறை பயன்படுத்தியிருக்கிறது.
இந்த திட்டத்தை வரவேற்கும் சிலர், தாஜ்மஹால் புகைப்படத்தை இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பில் அச்சிட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்
இது குறித்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பதிவு
இதுகுறித்து அந்நாட்டு அரசு சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது நீங்கள் ஒரு புதிய தொடக்கத்துடன் உங்கள் தாய் நாட்டுக்கு செல்லலாம்.
சிபிபி ஹோம் என்ற செல்போன் செயலியைப் பயன்படுத்தி நீங்களாகவே உங்கள் நாட்டுக்கு செல்ல முன்வரும் போது இலவச விமான டிக்கெட் மற்றும் வெளியேறுவதற்கான 2,600 அமெரிக்க டாலர்கள் சுமார் ரூ.2.41 லட்சம் போனஸ் தொகையைப் பெற்றிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
ஏன் இந்த தீடிர் முடிவு
உடனடியான இந்த திட்டத்திற்கு காரணமாக அந்நாட்டு அரசு சில விளக்கங்களை முன்வைத்துள்ளது ,அதில் அமெரிக்காவில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருப்போரை கண்காணிப்பதற்கான செலவுகளைக் குறைப்பதற்காகவும் ,
காவல், நீதித்துறை அமைப்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், அதே நேரத்தில் முறைசார்ந்த நாடு கடத்தலுடன் தொடர்புடைய சட்டரீதியான தண்டனைகளைத் தனி நபர்கள் தவிர்க்கவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.