ஈரான் தலைவர்அயதுல்லா காமேனி இறுதிச்சடங்கு: உச்ச தலைவர் மொஜ்தபா கலந்துகொள்ள மாட்டார்: மக்கள் கண்ணீர் அஞ்சலி

ஈரான் போரில் கொல்லப்பட்ட உச்சபட்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதை அடுத்து 120 நாட்களுக்கு பிறகு இறுதி சடங்கு நடைப்பெறுகிறது
Funeral of Iranian Leader Ayatollah Khamenei: Supreme Leader Mojtaba Will Not Attend
Funeral of Iranian Leader Ayatollah Khamenei: Supreme Leader Mojtaba Will Not Attend google
1 min read

 போரால் கொல்லப்பட்ட ஈரான் தலைவர்

நீடித்து வந்த ஈரான் அமெரிக்க போர் காரணமாக ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் . அதன் பிறகும் ஈரான் அமெரிக்க இடையே தீவிரமாக மோதல் ஏற்ப்பட்டு வந்தது .

முடிவுக்கு வந்த போர்

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ஈரான் அமெரிக்க இடையே நீடித்து வந்த போர் , அமைதி ஒப்பந்தம் மூலம் கையெழுத்தாகியுள்ளது .இதன்மூலம் வளைகுட நாடுகளில் நீடித்து வந்த போர் பதற்ற சூழல் முடிவுக்கு வந்துள்ளது

ஈரான் தலைவரின் இறுதி சடங்கு

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கானது நடைப்பெற இருப்பதாக அந்நாடு அரசு அறிவித்துள்ளது

இதில் கமேனியின் மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவருமான மொஜ்தபா கமேனி கலந்து கொள்ள மாட்டார் என்று ஈரான் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதியான அயதுல்லா ஹக்கீம் இலாஹி கூறும் போது

இந்த தகவலை இவர் உறுதிப்படுத்தியுள்ளார் , மேலும் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், ஈரான் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்

ஈரான் தலைவரின் இறுதிச்சடங்கு

ஈரான் போரால் கொல்லப்பட்ட அலி காமெனியின் இறுதிச்சடங்குகள் ஜூலை 4ஆம் தேதி டெஹ்ரானில் தொடங்க இருப்பதாகவும்

. டெஹ்ரானின் தென் பகுதி புனித நகரா குவோமில் அந்தச் சடங்குகள் நிறைவுற்று ஜூலை 9ஆம் தேதி அவரது சொந்த நகரான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

பல வாரங்களாக துக்கம் கடைப்பிடிக்கப்பட்ட பின்னரே அவர் உடலானது தற்போது அடக்கம் செய்யப்பட உள்ளது

குறிப்பாக நாட்டின் புதிய தலைவரே தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுவது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இறுதி சடங்கு . இந்தியா பங்கேற்பு

ஈரானின் உட்சபட்ச தலைவரின் இறுதி சட்ங்கில் இந்தியாவிலிருந்து காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in