

வளர்ச்சி அடைந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, கனடாவில் நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று இருக்கிறார்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்து வரும் பதிலடி குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் குறித்து, ஜி 7 நாடுகளின் தலைவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கான தங்களின் ஆதரவை தெரிவித்து உள்ள ஜி 7 நாடுகளின் தலைவர்கள், அதேசமயம் அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பும் முக்கிய என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர்.
பயங்கரவாதம் மற்றும் பிராந்திய அமைதியின்மைக்கு முக்கியமான மூல காரணம் ஈரான் என்று தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் தயார் செய்யப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்க மறுத்ததால், அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
=====