2026ல் ’சவரன் 2 லட்சம், வெள்ளி கிலோ 5 லட்சம்’ : நிபுணர்கள் கணிப்பு

Gold and Silver 2026 : புத்தாண்டு தொடங்கிய நாளிலிருந்தே தங்கதின் விலை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்தது ,தங்கம் மட்டுமல்லாது வெள்ளியின் விலையும் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Gold and Silver Rate 2026 Predictions gold will reach ₹ R. 2 lakh per sovereign, silver will Reach 5 Lakh : Experts' prediction in Tamil
Gold and Silver Rate 2026 Predictions gold will reach ₹ R. 2 lakh per sovereign, silver will Reach 5 Lakh : Experts' prediction in TamilSource : Google
1 min read

திடிரென்று உயர்ந்த விலை

Gold and Silver Rate Prediction 2026 in India : 2025 டிசம்பர் இறுதியில், 22 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,120 என்ற அளவில் இருந்தது. ஆனால் 2026 ஜனவரி 29ஆம் தேதி, ஒரே மாதத்துக்குள் தங்கம் விலை ரூ.1,34,400 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் பவுனுக்கு ரூ.34,000 உயர்வு என்பது இதற்கு முன் அரிதாகவே நடந்த ஒன்று குறிப்பிடத்தக்க்கது .

ஏற்ற இறக்கத்தால் குழம்பிய நகைப்பிரியர்கள்

2025 முழு ஆண்டில் 12 மாதங்களில் பவுனுக்கு ரூ.40,000 உயர்ந்திருந்த நிலையில், 2026 ஜனவரியில் மட்டும் ரூ.34,000 உயர்வு என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இனி விலையேற்றம் தொடரும்

இந்த வேகமான உயர்வுக்குப் பிறகு, தங்கம் விலை மேலும் உயருமா? அல்லது ஒரு கட்டத்தில் சரியுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது இடத்திலும் பரவத் தொடங்கிஉள்ளது

விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் காரணம்

சர்வதேச சந்தையில் ஒரு 'அவுன்ஸ்' தங்கம், அதாவது 31.5 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 800-ஐ (5 ஆயிரம் டாலர்கள்) கடந்தது,

அமெரிக்காவின் தொடர் வர்த்தகப் போர், ஐரோப்பிய நாடுகளுடன் மோதல் போக்கு, அமெரிக்க டாலர் வீழ்ச்சி, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் அதிகரிப்பு, போர்ச்சூழல், தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவது போன்றவை தங்கம் விலை உயருவதற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி உயர்வு என்பது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் 2 லட்சத்தை எட்டுமா தங்கம்

இந்த நிலைமை இப்படியே தொடரந்தால் நிச்சியமாக தங்கம் மற்றும் வெள்ளயின் விலை உயரும் என்று தெரிவிக்கும் நிபுணர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.2 லட்சத்தை எட்டும் அபாயம் உள்ளது.

வெள்ளி கிலோ ரூ.5 லட்சம்?

வெள்ளி ஒரு கிலோ ரூ.5 லட்சத்தையும் கடக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடுகின்றனர். மேலும், 2026ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை இதற்கு முன் இல்லாத அளவில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in