

இலங்கையை புரட்டிபோட்ட ‘டிட்வா’
India has proposed USD 450 package to help Sri Lanka, for reconstruction efforts following cyclone Ditwah - Jaishankar : அண்மையில் இலங்கையை தாக்கிய டிட்வா புயல் இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தியா உதவிக்கரம்
இக்கட்டான அந்தச் சூழ்நிலையில் இந்தியா மீட்பு படை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி ஆதரவு கரம் நீட்டியது. இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்றிருக்கிறார்.
இலங்கையில் ஜெய்சங்கர்
தலைநகர் கொழும்புவில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதிபருடன் பேச்சு, 450 மில்லியன் டாலர் நிதியுதவி
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடனும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், “ டிட்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கும்.
இதில் 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) சலுகையுடன் கடன் மற்றும் 100 மில்லியன் டாலர் மானியமும் அடங்கும்.
இயற்கை பேரிடரால் பெரும் பாதிப்பு
இந்த நிதி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாலை, ரயில் மற்றும் சேதம் அடைந்த பாலங்களை சரி செய்ய பயன்படுத்தப்படும்.
2022ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில், இந்த இயற்கை பேரிடர் புதிய சிரமங்களை உருவாக்கியுள்ளது.
இந்தியாவுக்கு தொடர்ந்து உதவி
பாதிப்பில் இருந்து மீண்டு வருபவதற்கு இலங்கையுடன் இணைந்து செயல்படுமாறு பிரதமர் மோடி எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கை மீண்டு வரை அனைத்து உதவிகளையும் இந்தியா தொடர்ந்து வழங்கும்.
மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த தேவைப்படும் உதவிகள் அளிக்கப்படும்.
இந்தியாவின் நேரடி முதலீடுகள் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெக்க பயன்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
=============================