அமெரிக்கா இடைத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வம்சாவளியினர் : டிரம்ப்க்கு நெருக்கடி..!

அமெரிக்க இடைத்தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்; டிரம்ப் ஆதரித்த விவேக் ராமசாமி தோல்வி!
Indian-Americans Strengthen Their Presence in American Politics with Key Election Wins
Indian-Americans Strengthen Their Presence in American Politics with Key Election WinsGoogle
1 min read

அமெரிக்க இடைத்தேர்தலில் என்ன நடந்தது?

அமெரிக்க இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்று கவனம் ஈர்த்திருக்காங்க.

குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், பிரதிநிதிகள் சபையில் இருக்கக்கூடிய 435 இடங்களுக்கும், செனட்டில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.

வெற்றியை பதிவு செய்த இந்திய வம்சாவளியினர் :

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமி பெரா, ரோ கண்ணா, சுஹாஸ் சுப்ரமணியம், பிரமிளா ஜெயபால் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க.

இதில் அமி பெரா 8-வது முறையாகவும், ரோ கண்ணா 6-வது முறையாகவும், பிரமிளா ஜெயபால் 6-வது முறையாகவும் வெற்றி பெற்றிருக்காங்க.

குறிப்பாக, சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடையேயும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

டிரம்ப் ஆதரித்த விவேக் ராமசாமிக்கு தோல்வி :

மறுபக்கம், குடியரசுக் கட்சி சார்பில் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தோல்வியை சந்தித்திருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டன் அவரைத் தோற்கடித்திருக்கிறார்.

டிரம்ப் நேரடியாக விவேக் ராமசாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இந்தத் தோல்வி கவனம் பெற்றிருக்கிறது.

டிரம்ப்புக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவு :

இந்தத தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது.

இதனால் டிரம்ப் கொண்டுவரும் புதிய சட்டங்கள், அவருடைய அரசின் முக்கிய முடிவுகள் போன்றவற்றுக்கு ஜனநாயக கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளை முன்வைக்க முடியும்.

மேலும், டிரம்ப் அரசின் செயல்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்ற விசாரணைகளையும் நடத்த முடியும்.

==============

====================