இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் - மகன் : பிரிட்டனில் மேயர்களாக தேர்வாகி சாதனை!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துஷார் குமாரும் (23), அவரது தாய் பர்​வீன் ராணி​யும் பிரிட்​டனில் அடுத்தடுத்து மேயர்​களாகத் தேர்​வாகி சாதனை படைத்​துள்ளனர்.
Indian-origin mother and son set a record by being elected as mayors in Britain
Indian-origin mother and son set a record by being elected as mayors in Britain google
1 min read

பிரிட்டனில் இந்தியர்கள் சாதனை

ஹரி​யானா மாநிலம் ரோஹ்தக் பகு​தி​யைச் சேர்ந்த ஒரு குடும்​பம், கடந்த 2013-ம் ஆண்​டில் பிரிட்​ட​னுக்​குக் குடிபெயர்ந்தது. தற்​போது அந்​தக் குடும்​பத்​தைச் சேர்ந்த துஷார் குமாரும் (23), அவரது தாய் பர்​வீன் ராணி​யும் பிரிட்​டனில் அடுத்தடுத்து மேயர்​களாகத் தேர்​வாகி சாதனை படைத்​துள்ளனர்.

இளம் வயதில் மேயராக சாதனை

இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய் மகன் இருவரும் , பிரிட்​டன் வரலாற்​றிலேயே மிகக் குறைந்த வயதில் மேயர் நாற்​காலி​யில் அமர்ந்த இந்​திய வம்​சாவளி இளைஞர் என்ற பெரு​மையை துஷார் குமார் பெற்​றுள்​ளார்.

தாய், மகன் : மேயராக சாதனை

துஷார் குமார் ‘எல்ஸ்ட்ரி மற்​றும் போஹம்​வுட்’ நகர சபை​யின் மிக இள வயது மேய​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளார். அவர் பதவி​யேற்ற ஒரு வார இடைவெளி​யில்,

அவரது தாய் பர்​வீன் ராணி ‘ஹெர்ட்​ஸ்​மியர்’ பெருநகர சபை​யின் முதல் இந்​திய வம்​சாவளி மேய​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு சாதனை படைத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது

இதுகுறித்து துஷாரின் தந்​தை​யும் தொழில​திபரு​மான சுனில் தஹியா பிடிஐ செய்தி நிறு​வனத்​திடம் கூறுகை​யில், “கடந்த மே 13-ம் தேதி துஷார் மேய​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். அதனைத் தொடர்ந்து மே 20-ம் தேதி பர்​வீன் மேய​ராகப் பதவி​யேற்​றார்.

ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே நேரத்​தில் மேயர்​களாகப் பொறுப்​பேற்​றிருப்​பது ஒட்​டுமொத்த இந்​திய வம்​சாவளி​யினருக்​கும் பெருமை சேர்க்​கும் விஷய​மாகும்’’ என்​றார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் யார்

ஹரி​யானாவின் சோனிபட் மாவட்​டத்​தில் உள்ள கர்​கோடா பகுதியின் ரோஹ்னா கிராமத்​தை பூர்​வீக​மாகக் கொண்ட தஹியா குடும்​பத்​தினர், பிரிட்​டன் செல்​வதற்கு முன்பு நீண்ட காலம் ரோஹ்தக்​கில் வசித்து வந்​தனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in