

3 நாடுகளுக்கு அரசுமுறை பயணம்
"Bintang Adipurna of the Republic of Indonesia" Indonesian Medal of Honour recognises PM's leadership in strengthening India-Indonesia friendship : இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தோனேசியாவில் மோடி
முதல்கட்டமாக இந்தோனேசியா சென்ற மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்று கௌரவப்படுத்தினார். இந்திய வம்சாவளியினர் அளித்த உற்சாக வரவேற்பினையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
மோடிக்கு ”பின்டாங் ஆதிபூர்ணா”
2வது நாளான இன்று பிரதமர் மோடியும், அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோவும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு, இந்தோனேசியாவின் மிக உயரிய விருதான ”பின்டாங் ஆதிபூர்ணா” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இருநாட்டு நல்லுறவு, சர்வதேச விவகாரங்களில் இந்தியா காட்டும் அக்கறையை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
20 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இருதலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்தியா - இந்தோனேசியா இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவின் பிரமோஸ் மற்றும் ASTRA- MK1 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தோனேசியா கையெழுத்திட்டது.
இந்தோனேசியாவில் UPI பணப்பரிவர்த்தனை
இந்தோனேசியாவில் UPI பணப்பரிவர்த்தனை இணைப்பு, இந்தியப் பெருங்கடலில் இரு நாட்டு கடலோரக் காவல் படைகளும் இணைந்து பணியாற்றவும், பெங்களூரு IIM கல்வி வளாகம் திறக்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
==============.