”நண்பா கவலை வேண்டாம்’’ : ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் அனுமதி : இந்தியாவுக்கு ஈரான் வாக்குறுதி...

போர் நீடித்தாலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல எந்த கட்டுப்பாடும் கிடையாது, பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.
Iran assured that there will be no restrictions on the passage of Indian ships through the Strait of Hormuz
Iran assured that there will be no restrictions on the passage of Indian ships through the Strait of Hormuz google
3 min read

ஈரான் போர்

Indian friends in safe hands, no worries': Iran assures India of safe passage in Hormuz amid escalating war crisis : ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 30 நாட்களை தாண்டி நீடிக்கிறது. தற்காலிகமாக அமெரிக்கா தாக்குதலை நிறுத்தி இருந்தாலும், 6ம் தேதிக்கு பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பது தெரியவரும்.

ஹோர்முஸ் நீரிணை

ஈரான் அருகேயுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை அந்நாட்டு முடக்கி வைத்துள்ளது. எனவே, அந்த வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாது. மீறி செல்ல முயன்றால், ஈரானை தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

காத்துக் கிடக்கும் கப்பல்கள்

இதனால், 2,800க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடா கடல் பகுதிகளில் நங்கூரமிட்டு இருக்கின்றன. இவற்றில் உள்ள பணியாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது

இந்தியாவுக்கு ஈரான் அனுமதி

இந்த நீர்வழிப்பாதை வழியாக சரக்குக் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக தொடரும் நட்பின் விளைவாக இந்தியாவுக்கு இந்த சலுகையை ஈரான் வழங்கி இருக்கிறது.

நீடிக்கும் பிரச்னைகள்

ஈரான் போர் காரணமாக எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை உலக நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற சில நாடுகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், நிலைமை இன்னும் சீராகவில்லை.

இந்தியாவுக்கு ஈரான் உறுதி

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் இந்திய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம் என ஈரான் தூதரகம் உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’ஹார்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும் ஓமானும் மட்டுமே தீர்மானிக்கும்.

இந்திய நண்பர்களே கவலை வேண்டாம்

இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை’ என கூறப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை 'நட்பு நாடுகள்' என வகைப்படுத்தியுள்ள ஈரான், அவற்றின் கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதி அளிப்பதாகக் கூறியுள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் ஈரான் ஹார்முஸ் ஜலஜந்தியில் முற்றுகையை அறிவித்ததிலிருந்து, இதுவரை ஆறு இந்தியக் கொடி ஏற்றப்பட்ட எரிபொருள் கப்பல்கள் அந்த முக்கிய எரிசக்தித் தடைப் பகுதியைப் பாதுகாப்பாகக் கடந்து வந்துள்ளன.

====================

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 30 நாட்களை தாண்டி நீடிக்கிறது. தற்காலிகமாக அமெரிக்கா தாக்குதலை நிறுத்தி இருந்தாலும், 6ம் தேதிக்கு பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in