

ஈரான்-இஸ்ரேல் சண்டை 9வது நாளை எட்டி உள்ளது. முதலில் இஸ்ரேலின் கை ஓங்கி இருந்தாலும், ஈரானின் தாக்குதல்கள் இஸ்ரேல் நகரங்களை சின்னாபின்னமாக்கி வருகின்றன.
இந்தச் சண்டையில் ஈரான் முதன்முறையாக கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி வருகிறது.
பல குண்டுகளாக சிதறி வெடிக்கும் வகையை அவை சார்ந்தது என்பதால், பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும்.
குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கட்டிடங்களை இந்தக் குண்டு தகர்த்து வருகின்றன.
சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை தடுக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.
இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபா மற்றும் டான் மாவட்டங்கள் உட்பட பல பகுதிகள் மீது ஈரான் நேற்று சரமாரியாக ஏவுகணைகளை வீசியது.
பலர் உயிரிழந்து இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில்,ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பாக பதுங்கு குழிகள் இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி உள்ளது.
====