

விசா ஃப்ரீ ரத்து
Iran Ban Visa Free for Indians Update in Tamil : பொதுவாக சில நாடுகள் விசா ஃப்ரீ என அறிவித்து இருக்கும். இதனால், சுற்றுலா செல்வோர் மற்றும் குறிப்பாக பணிக்கு செல்வோர் இயல்பாகவும், எந்த வித தடங்களும் இன்றி தங்களின் விருப்பப்பட்ட நாடுகளுக்கு சென்று வருவர். ஆனால், அதிலும் குறிப்பிட்டு நாடுகளுக்கு ஒப்புதல் அளித்தும், தடையும் விதித்து இருக்கும். அதன்படி, இந்தியாவுக்கு ஈரான் விசா ஃபீரி(Iran Free Visa) என இருந்தநிலையில், தற்போது ஏற்படும் குளறுபடி மற்றும் மோசடிகளால் இந்த அனுமதி மறுக்கப்ட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
MEA தகவல்களால் அதிர்ச்சி
MEA தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பல இந்தியர்கள் “வெளிநாட்டில் வேலை”, “மூன்றாவது நாட்டுக்கான டிரான்சிட்” போன்ற பெயர்களால் ஏமாற்றப்பட்டு ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கே சென்ற பிறகு, சிலரை குற்றவியல் குழுக்கள் கடத்தி, பணம் கேட்டு குடும்பத்தினரிடம் மிரட்டல் விடுத்ததாக பல புகார்கள் வந்துள்ளன. விசா-ஃப்ரீ வசதி(Visa Free Iran) இருப்பதால் இந்த மோசடிகள் வேகமாக அதிகரித்ததால், ஈரான் அரசு இந்த சலுகையை நிறுத்தத் தீர்மானித்துள்ளது. இதனால் இனி இந்தியர்களுக்கு விசா ஃபீரி(Iran Free Visa for Indians) கிடையாது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இனி விசா அவசியம் இந்தியர்களே உஷார்
விசா கட்டாயம் நீங்கள் சுற்றுலா பயணம், தொழில் பயணம் அல்லது Transit பயணமாக ஈரான் விமான நிலையம்(Iran Airport) வழியாக சென்றாலுமே விசா அவசியம். “விசா இல்லாமலே transit” என்ற நடைமுறையும் இனி கிடையாது. இது airlines-க்கும் பொருந்துகிறது.
எந்தப் பயணிக்கும் செல்லுபடியாகும் ஈரான் விசா இல்லாவிட்டால், விமான நிறுவனங்கள் ஏறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொட்ர்ந்து பல வித குற்ற செயல்களை தடுக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தீர்ப்பிற்கு, பலர் ஆதரவு தெரிவித்தாலும். பணி ரீதியாக செல்வோருக்கும் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது என ஈரானில் பணிபுரியும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.