

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்
அணு ஆயுதங்களை ஈரான் வச்சி இருக்கிறதா, அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இதையே காரணமாக வச்சி, பிபர்வரி 28ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். அந்த நாட்டிற்கு ஆதரவா, அமெரிக்காவும் களத்தில குதிச்சு, வான்வழி தாக்குதல் மூலமா பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியது.
ஈரானை உருக்குலைத்த அமெரிக்கா
குறிப்பாக முக்கிய நகரங்களில் இருந்த அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. கொடூரமான தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டாங்க. ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை உள்கட்டமைப்புகள் உருக்குலைந்தன.
போரால் அமெரிக்காவுகு பேரிழப்பு
இதற்காக அமெரிக்காவும் பெரிய விலையை கொடுத்து இருக்கு. அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் ட்ரோன்களை கொண்டு தாக்கியது. 8 மாத போரினால், அமெரிக்காவும் பெரிய அளவில் ஆயுதங்களை இழந்து இருக்கு. பல லட்சம் கோடிகள செலவு செஞ்சிருக்கு.
கடும் சிக்கலில் அதிபர் டிரம்ப்
ஈரான் மீதான சண்டை, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பெரும் நெருக்கடிய கொடுத்து வருது. பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் அவர் மீது மக்களோட கோபத்தை திருப்பி இருக்கு. எனவே தான், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிச்ச டிரம்ப், இப்போ வேறு வழியின்றி, ரஷ்யாவிடம் டீசல் வாங்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காரு.
சவாலாக மாறிய இடைத்தேர்தல்
ஒரு பக்கம் போரில் கிடைக்காத வெற்றி, பொருளாதார சீர்குலைவு, மக்களின் கோபம் என திக்குமுக்காடும் டிரம்பிற்கு, அமெரிக்க இடைத்தேர்தலில் பெரும் சவாலா அமைய போகுது.
நவம்பர் 3ம் தேதி நடக்க இருக்கிற மிகப்பெரிய இடைத்தேர்தல், அவர் 2வது முறையா அதிபரா பொறுப்பேத்த பிறகு, சந்திக்கிற தலைவலியா மாறி இருக்கு.
காரணம் என்ன அப்படின்னா, ஒரே சமயத்துல aமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு 435 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்காங்க,
மேல் சபையான செனட்டுக்கு 35 உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட போறாங்க. அது மட்டுமல்லாம 36 மாநிலங்களுக்கு ஆளுநர்களும் தேர்தல் மூலமா தேர்ந்து எடுக்கப்பட போறாங்க.
அமெரிக்கர்கள் கொடுக்க போகும் தீர்ப்பு
அதிபரின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தின் பாதியில் (இரண்டாவது ஆண்டில்) இந்தத் தேர்தல் நடப்பதால, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிஆட்சிக்கு மக்கள் அளிக்க போற முக்கிய தீர்ப்பா இது பார்க்கப்படுது.
பெரும்பான்மை மிக அவசியம்
அமெரிக்க நாடாளுமன்றத்துல இரண்டு சபைகளிலும் குடியரசு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருந்த மட்டும் தான், அதிபர் டிரம்ப், திடீர், திடீர்ன்னு தான் கொண்டு வர திட்டங்கள், மசோதாக்களை செயல்படுத்த முடியும்.
ஜனநாயக கட்சிக்கு பெருகும் ஆதரவு
அப்படி இல்லாம எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றினா, இருக்கிற ஆட்சிக் காலமும் டிரம்பிற்கு குடைச்சல் அதிகமா இருக்கும்.
பெரும்பான்மை இல்லா விட்டால் டிரம்புக்கு குடைச்சல்
இடைத்தேர்தலில் ஒரு அவைய ஜனநாயக கட்சி கைப்பற்றி விட்டாலும், டிரம்பால் நிம்மதியா செயல்படவே முடியாத நிலை உருவாகி விடும். ஏற்கனவே, ஈரான் போரால் மக்களோட பகை, இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியும் பாய்ஞ்சா, 2028 அதிபர் தேர்தலில் வெற்றி என்பது குடியரசு கட்சிக்கு எட்டாக் கனிதான்.
வரிகளை ரத்து செய்த டிரம்ப்
இடைத்தேர்தல் பயம் காரணமா தான் அதிபர் டிரம்பும் கொஞ்சம் அடக்கி வாசிச்சுகிட்டு வர்றாரு. இந்தியா, சீனா மீது விதிக்கப்பட்ட 100 சதவீத வரியை ரத்து பண்ணி இருக்காரு.
மக்களுக்கு பணப்பரிசு-ஆசை காட்டும் டிரம்ப்
இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றா, வயது வந்த ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் 5 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்புல 4 புள்ளி 75 லட்சம் ரூபாயை கொடுக்க போவதாவும் அள்ளி விட்டு ஆசை காட்டி இருக்காரு டிரம்ப்.
இடியை இறக்கி இருக்கும் ஈரான்
இந்தநிலையில, தான், இடைத்தேர்தலில் டிரம்பிற்கு எதிரா இடியை இறக்கி இருக்கு ஈரான். அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மூலமா அமெரிக்கர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கு.
மக்களை வாட்டும் டிரம்ப் அரசு
அது என்னன்னு பார்த்தீங்கன்னா, ஈரான் மீதான போரால் அமெரிக்க பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறதாவும், கச்சா எண்ணெய், எரிபொருள் விலையேற்றம் மக்களை பாதிச்சு வர்றதாவும் தெரிவிக்கப்பட்டு இருக்கு.
டிரம்போட போர் வெறி, அமெரிக்கர்களை வாட்டி வதைக்கிறதாவும், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் தலா 2 ஆயிரம் டாலர் அதாவது, இந்திய மதிப்புல 1 புள்ளி 7 லட்சம் ரூபாய் துண்டு விழுந்து இருக்கிறதாவும், ஈரான் கடுமையா சாடியிருக்கு.
இடைத்தேர்தலில் டிரம்பை தோற்கடிங்க
எனவே, இடைத்தேர்தலில் டிரம்பிற்கும், குடியரசு கட்சிக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டணும், டிரம்பை தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே, அமெரிக்க மக்கள் பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியும்,அவர் மீதான அரசியல் மாயையை அமெரிக்கர்கள் உடைக்கணும் அப்படின்னும் ஈரான் அறிவுரை சொல்லி இருக்கு.
டிரம்பிற்கு நாலாபுறமும் நெருக்கடி
இடைத்தேர்தல், மக்கள் செல்வாக்கு இல்லாமை, ஜனநாயக கட்சிக்கு பெருகும் ஆதரவு, பொருளாதார சிக்கல், போட்ட திட்டங்கள் எல்லாம் தோல்வி அப்படின்னு, சின்னாபின்னமாக இருக்கும் அதிபர் டிரம்பிற்கு, ஈரானின் இந்த எச்சரிக்கை பேரிடியா வந்து அமைஞ்சு இருக்கு.
==============