Iran War : ”48 மணி நேரம் கெடு, இல்லையென்றால் நரகம்” : டிரம்ப் இறுதி எச்சரிக்கை, வாங்க பார்க்கலாம்! ஈரான் சவால்...

ஈரானுக்கு 48 மணி நேர இறுதி கெடுவை அதிபர் டிரம்ப் விதித்த நிலையில், அதனை அந்நாடு மறுத்து எதையும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
Iran has rejected President Trump's 48-hour deadline for a deal, saying it is ready to face anything
Iran has rejected President Trump's 48-hour deadline for a deal, saying it is ready to face anythinggoogle
1 min read

ஒருமாதம் தாண்டிய ஈரான் போர்

48 hours before all hell will rain down: Trump warns Iran on Hormuz blockade : Trump War for Strait Of Hormuz: ஈரான் போர் ஒரு மாத காலத்தை தாண்டி விட்டது. இஸ்ரேலும், அமெரிக்காவும் போட்ட அனைத்து கணக்குகளும் தவிடுபொடியாகி விட்டன. சளைக்காமல் மல்லுக்கட்டுகிறது ஈரான்.

ஹோர்முஸ் நீரிணை

ஹோர்மூஸ் நீரிணையை மூடி உலக நாடுகளை அதிர வைத்த நீரான், கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதை தடுத்து விட்டது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணெய் கப்பல்கள் நீரிணையை கடக்க முடியாமல் காத்துக் கிடக்கின்றன.

தள்ளாட்டம் காணும் பொருளாதாரம்

இதனால் உலக அளவில் பொருளாதாரம் தள்ளாட்டம் காண்கிறது. பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்து வருகின்றன. பொருளாதார லாக்டவுனை நோக்கி ஒருசில நாடுகள் தள்ளப்பட்டு இருக்கின்றன.

ஈரானை எச்சரித்த டிரம்ப்

பிரச்னையை முடிவுக்கு கொண்டு ஒன்று ஒப்பந்தம் மேற்கொள்ளுங்கள் அல்லது ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை திறந்து விடுங்கள் என ஈரானுக்கு டிரம்ப் 10 நாட்கள் கெடு விதித்தார். அது நாளையோடு முடிகிறது.

ஈரானுக்கு நரகத்தை காட்டுவேன்

ஈரான் எந்த பதிலும் தராததால், இறுதி எச்சரிக்கை விடுத்து டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். ”48 மணி நேரத்தில் நான் சொன்னதை ஈரான் செய்யாவிட்டால், அவர்கள் மீது நரகத்தை இறக்குவேன். பெருமை கடவுளுக்கே போய் சேரட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நட்பு நாடுகளுக்கு ஈரான் அனுமதி

நட்பு நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான் நாட்டு எண்ணெய் கப்பல்கள் மட்டும் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதித்து வருகிறது. அமெரிக்கா வைக்கும் ஒப்பந்தத்தின் விவரங்கள் ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறி, அதனை ஏற்க ஈரான் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

அமெரிக்காவுக்கு ஈரான் எதிர்ப்பு

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா தரப்பு பல்வேறு பேச்சுவார்த்தை திட்டங்களை முன்வைத்தாலும், பாதுகாப்பிற்கான உத்தரவாதம் மற்றும் சேதங்களுக்கான இழப்பீடுகளை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் உறுதியாக இருக்கிறது.

டிரம்பின் கெடுவையும் புறந்தள்ளி இருக்கும் ஈரான் எதையும், எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சவால் விடுத்துள்ளது. இதனால் ஈரான் போர் இப்போதைக்கு முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in