மீண்டும் போர் நிறுத்தம் அறிவிப்பு , டிரம்ப் அறிவிப்பு
ஈரான் அமெரிக்க இடையே போர் ஒப்பந்தம் அமைதி உடன்பாட்டை எட்டிய நிலையிலும், ஹோர்மூஸ் வழியாக சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தியது , இதனால் அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வதாக அமெரிக்க அறிவித்தது , இது வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது உலக் நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியது ,
இந்த சூழலில் மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க முழுவீச்சில் இருக்கிறது அமெரிக்கா
இந்த அறிவிப்பு குறித்து டிரம்ப் தனது பதிவில் , இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரான் உருவெடுத்திருக்கிறது.
அந்த நாட்டு ராணுவம், தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்கா முழுவீச்சில் தயாராக இருக்கிறோம்
எனினும், போரை நிறுத்துமாறு ஈரானும், மத்திய கிழக்கு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதன்மூலம் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார்,
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட வேண்டும். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்
இரு நாடுகளின் தீவிர தாக்குதல்
அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜூலை 13-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஈரானின் ராணுவ தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், ஆயுதக் கிடங்குகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதல்களை நடத்தியிருந்தது , இது வளைகுடா நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது
உல நாடுகளை குழப்ப திட்டமா?
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இதற்கு முன்னரே ஈரானும் அமெரிக்காவும் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுப்பட்டிருந்து அதை மீண்டும் ரத்து என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளை குழப்பதில் ஆழ்த்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன
=============================