முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? படைகளை திரும்பப் பெற அதிபர் டிரம்ப்புக்கு உத்தரவு! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

ஈரானில் இருந்து அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப் பெறக் கோரும் தீர்மானம் : டிரம்ப் கட்சி உறுப்பினர்கள் 4 பேர் ஆதரவு!
President Trump ordered to withdraw troops from Iran war! Decision in the US Parliament!
Is the Iran War Coming to an End? President Trump Ordered to Withdraw Troops! Resolution Passed in the US Congress!source:google
1 min read

இஸ்ரேல், அமெரிக்க ஈரான் போர்

ஈரான் போரிலிருந்து அமெரிக்க படைகளை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிடும் முக்கிய தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (House of Representatives) நேற்று (ஜூன் 3) நிறைவேற்றியுள்ளது.

அதிபர் டிரம்புக்கு பின்னடைவு

இந்த அதிரடி நடவடிக்கை அதிபர் டொனால்ட் டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிடைத்துள்ள பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

பின்னணி என்ன?

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, ஈரானின் அணுஆயுத கொள்கைகளை கைவிடக் கோரி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

தற்காலிக போர்நிறுத்தம்

அதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் அவை தோல்வியில் முடிந்தன.

ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டு

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தின் முறைப்படியான அனுமதியின்றி, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்ததன் மூலம் அதிபர் டிரம்ப் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

டிரம்ப் கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்

அமெரிக்கப் போர் அதிகாரச் சட்டத்தின்படி, ராணுவப் படைகளைப் போரில் ஈடுபடுத்திய பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அதிபருக்கு 60 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த காலக்கெடு பல வாரங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையிலும் டிரம்ப் ஒப்புதல் பெறவில்லை.

அரசியலமைப்பை மீறி செயல்படுவதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு

இதனால், அதிபர் டிரம்ப் அரசியலமைப்பை மீறி செயல்படுவதாக கூறி, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆளும் கட்சியில் பிளவு

அதிபர் டிரம்பின் ஆளும் குடியரசுக் கட்சியை (Republicans) சேர்ந்த 4 முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் கட்சி நிலைப்பாட்டை மீறி எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது டிரம்ப் நிர்வாகத்திற்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டம் என்ன?

இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக முழு வடிவம் பெற்று அமலுக்கு வர வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் மற்றொரு அவையான அமெரிக்க செனட் சபையிலும் இது நிறைவேற்றப்பட வேண்டும்.

வீட்டோ அதிகாரம்

அங்கு ஒருவேளை இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதிபர் டிரம்ப் தனக்குள்ள சிறப்பு "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

போர் முடிவுக்கு வருமா?

அதிபரின் அந்த வீட்டோ அதிகாரத்தை முறியடிக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால், உடனடியாக ஈரான் போர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in