GTA 6: 52 மணி நேரம் தூங்காமல் live -ல் விளையாடி முடித்த யூடியூபர் ஐஷோஸ்பீட்: இறுதி காட்சியைப் பார்த்து அழுது நெகிழ்ச்சி!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் , GTA 6 வீடியோ கேமை நேரலையில் கிட்டத்தட்ட 52 மணி நேரத்தில் விளையாடி முடித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
IShowSpeed Completes GTA 6 Live Stream 52 Hours Record
IShowSpeed Completes GTA 6 Live Stream 52 Hours Recordsource:google
1 min read

IShowSpeed Completes GTA 6 Live Stream 52 Hours Record

52 மணி 30 நிமிடங்களில் ஜிடிஏ 6-ஐ முடித்து சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற யூடியூபர் 'ஐஷோ ஸ்பீட்' (IShow Speed) எனப்படும் டேரன் வாட்கின்ஸ் ஜூனியர், பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ள 'ஜிடிஏ 6' (Grand Theft Auto 6) வீடியோ கேமை 52 மணி நேரம் 30 நிமிடங்களில் நேரலையில் விளையாடி நிறைவு செய்து உலக அளவில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தூக்கத்தைத் தவிர்த்து தொடர் நேரலை

21 வயதாகும் டேரன் வாட்கின்ஸ் ஜூனியர், தனது துறுதுறுப்பான செயல்பாடுகளாலும், குறும்புத்தனமான சேட்டைகளாலும் சமூக வலைதளங்களில் 'ஸ்பீட்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர்

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகரான இவர், தடகளத்திலும் ஆர்வம் கொண்டவர். யூடியூபில் நேரலை வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

40 மணி நேரத்தில் 80% நிறைவு

ஜிடிஏ 4 கேம் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான விளையாட்டாக இருந்து வந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜிடிஏ 6 எடிஷன் வெளியாகியுள்ளது. ஜிடிஏ 6 கேம் வெளியான இரண்டே நாட்களில், முதல் 40 மணி நேரத்தில் 80 சதவீத விளையாட்டை ஸ்பீட் முடித்துள்ளார்.

ஓய்வின்றி விளையாடி சவால்

இடையிடையே தூக்கம் வந்தபோதும் அதனைப் பொருட்படுத்தாமல், "இந்த விளையாட்டை முழுவதுமாக முடிக்கும் வரை ஓயமாட்டேன்" என நேரலையில் சவால் விடுத்துத் தொடர்ந்து விளையாடியுள்ளார்.

இரவு பகல் பாராமல் 52 மணி நேரம் 30 நிமிடங்களில் ஒட்டுமொத்த விளையாட்டையும் நிறைவு செய்து அனைவரையும் ஸ்பீட் மிரள வைத்துள்ளார்.

இறுதிக்காட்சியில் கண்ணீர் விட்டு அழுத Speed

வழக்கமாக வெற்றிகளைக் கத்தி கூச்சலிட்டுக் கொண்டாடும் ஸ்பீட், ஜிடிஏ 6 விளையாட்டை முழுவதுமாக முடித்ததும் அமைதியாகி கண்ணீர் விட்டு அழுதார்.

ஜிடிஏ 6 விளையாட்டின் இறுதிக்கட்டத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவரும் உயிரிழக்கும் காட்சியைப் பார்த்து அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது கேமின் முக்கியத் திருப்பத்தை வெளிப்படுத்தும் 'ஸ்பாயிலராக'அமைந்தாலும், ஸ்பீட்டின் உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினையைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும், இவ்வளவு குறுகிய நேரத்தில் எவ்வாறு மொத்த விளையாட்டையும் முடித்தார் என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருவதால், அவரது நேரலை வீடியோக்கள் யூடியூபில் தற்போது வைரலாகி வருகின்றன.

======================