
Israel Hamas War Ceasefire : தொடர்ந்து 2 வருடங்களாக தற்பொழுது வரை ஹமாஸ், இஸ்ரேல் போர் தொடர்ந்து வந்த நிலையில், இந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடுமையாக தாக்கி வந்தது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசியிதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க அவர் சம்மதம் தெரிவித்தார்.
ஹமாஸ் ஒப்பந்தம் அனுப்பி வைப்பு
இதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, தற்போது, ஹமாஸ் அமைப்பு டிரம்ப் திட்டத்தினை ஏற்று, இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க சம்மதித்துள்ளன. தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் போர்(Israel Hamas War) நிறுத்த முயற்சி, இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டார்.
டொனால்ட் டிரம்ப் பதில் :
ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அவர்கள் அமைதிக்கு தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட அவர், தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து ஒரு முடிவை எட்டியுள்ளோம். இது காசா பிரச்னை மட்டும் கிடையாது. மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டிய ஒரு முக்கியமான ஒன்றாகும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகநாடுகள் கருத்து
ஹமாஸ்- இஸ்ரேல் போரால் இதுநாள் வரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறி போனநிலையில், தற்பொழுது வரை கவலைக்கிடமாகவும், உணவு இல்லாமல் காசா பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 2 வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த போர் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது டிரம்பின் ஒரு முயற்சியாகவும் உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : காசாவில் ஓய்ந்த குண்டு சத்தம் : டிரம்பின் முயற்சி, மோடி பாராட்டு
காசாவில் அமைதி திரும்புகிறது
இந்நிலையில், தற்பொழுது இரு நாட்டினரும் இதற்கு சம்மதம் தெரிவித்து அமைதி ஒப்பந்தத்திற்கு தயாராகியுள்ள நிலையில், இந்த போர் முடிவடைந்து விடும் என உலக நாட்டின் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால், மீண்டும் காசா மக்கள் ஒரு நிலையான, நிம்மதியான வாழ்க்கையை தொடர்வர் என்று கூறுகின்றனர்.