லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் : 250 பேர் உயிரிழப்பு : 1,000 பேர் படுகாயம்

ஈரான் அமெரிக்கா இடையே இரு வார போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் நேற்று லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது .
Israel launches heavy attacks on Lebanon: 89 dead; 700 critically injured.
Israel launches heavy attacks on Lebanon: 89 dead; 700 critically injured. google
1 min read

இஸ்ரேல் கடும்தாக்குதல்

ஈரான் அமெரிக்கா இடையேயான போர் நீரில் இரு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே , லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது

தற்காலிக போர் ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது இந்த நிலையில் ஈரான் அமெரிக்காவிற்கு சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளது.

மேலும் ஹோர்முஸ் நீரினை வழியாக கப்பல்களை அனுமதிப்பதற்கு சில கட்டுப்பாடுடன் கூடிய பண நிபந்தனைகளையும் ஈரான் முன்வைத்தது.

இஸ்ரேல் திடீர் தாக்குதல்

இந்த இருவாரகால ஒப்பந்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராகத் தங்கள் போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறர் .

இதன் வெளிப்பாடே பெய்ரூட்டின் மத்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் கண்முடித்தனமான தாக்குதல்

இஸ்ரேல் போர் விமானங்கள் வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனான் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெய்ரூட்டின் வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முன்னறிவிப்பின்றித் தாக்கப்பட்டதால், தெருக்களில் சென்ற வாகனங்கள் முழுவதும் தீக்கிரையாயின.

மருத்துவ பணியாளர்களே இல்லாத நிலை

லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 12 பேர் மருத்துவப் பணியாளர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது ,காயமடைந்த 700 பேருக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் இடமில்லாத சூழல் நிலவுகிறது.

அவசரமாக ரத்த தானம் செய்யுமாறு அரசு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது

இஸ்ரேலின் மறைமுக தாக்குதல் :போர்க்குற்றம்

ஏற்கனவே 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்து இருக்கும் நிலையில் ,இஸ்ரேலின் இந்த மறைமுகத் தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அங்கு வான்வெளி மூடப்பட்டுள்ளதால், 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் நில எல்லைகள் வழியாக அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருவைத்து கவலைக்குரிய நிலமையாக இருக்கிறது.

அமெரிக்கா உடனான ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் :ஈரான்

இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தாத பட்சத்த்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in