ஈரான் போரால், அமெரிக்காவுக்கு ரூ.19 லட்சம் கோடி செலவு! : என்ன காரணம்?

ஈரான் இஸ்ரல் போர் நடவடிக்கியா தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு ரூ.19 லட்சம் கோடி வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுளது.
It has been reported that the cost to the United States of up to Rs. 19 lakh crore if the Iran-Israel war continues.
It has been reported that the cost to the United States of up to Rs. 19 lakh crore if the Iran-Israel war continues. google
1 min read

நீடிக்கும் ஈரான் இஸ்ரேல் போர்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குல் இன்று 6-வது நாளை எட்டியிருக்கும் நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

தொடரும் போர் அமெரிக்காவிற்கு அதிகரிக்கும் செலவு

ஈரானுக்கு எதிரான போரில் யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் உட்பட உலகின் மிகப்​பெரிய 2 விமானம் தாங்​கிக் கப்​பல்​களை அமெரிக்கா பயன்​படுத்​தி வருகிறது.

இந்​தக் கப்​பல்​களை இயக்க ஒவ்வொரு கப்​பலுக்​கும் ஒரு நாளைக்கு தலா ரூ.58 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,

அதே சமயம் ராணுவ வீரர்​களைக் குவிப்​ப​தற்​கும் அவர்களின் தேவை​களுக்​கும் பராமரிப்பிற்கும் இது​வரை சுமார் ரூ.5,500 கோடி செல​விடப்​பட்​டுள்​ள​து தெரிய​வந்​துள்​ளது.

முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.6,900 கோடி செல​விட்​டுள்​ள​தாக்க தெரிவித்துள்ளது.

போர் நீடித்தால் செலவு அதிகரிக்கும்

இந்த போர் தொடர்ந்து நீடித்தால் அமெரிக்காவிற்கு ரூ.3.67 லட்​சம் கோடி முதல் ரூ.10.57 லட்​சம் கோடி வரை செல​வாகும் என்று நிபுணர்​கள் கணக்​கிட்​டுள்​ளனர். அதற்கு மேலும், போர் நீடித்​தால், ரூ.18.87 லட்சம்​ கோடி செல​வாகலாம்​ என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் படிக்க :ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் : 1,000ஐ தாண்டிய உயிரிழப்பு : தற்போதைய நிலவரம் என்ன?

ஈரானுக்கு வழங்கப்படும் நிதியாலும் செலவு அதிகரிக்கலாம்

ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போரானது தொடர்ந்து நீடிக்குமேயானால் செலவானது அதிகரிக்கும் என்றும் ,அதாவது இஸ்​ரேலுக்கு வழங்​கப்​படும் நிதி உதவியை​யும் கருத்தில் கொண்​டால், இந்த செலவு அமெரிக்க நாட்​டுக்கு மேலும் அதிகரிக்​கும் என்று தெரி​கிறது.

அது​மட்​டுமின்றி மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க படைத்​தளங்​கள் பல, ஈரானின் ஏவுகணை தாக்​குதல்​களால் பாதிக்​கப்​பட்டுள்ளதால் செலவு மதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க :லெபனானின் முக்கிய இடங்களை கைப்பற்ற வேண்டும் : இஸ்ரேல் படைகளுக்கு நெதன்யாகு உத்தரவு

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in