ஈரானில் தொடரும் பதற்றமான சூழல்
ஈரான் இஸ்ரேல் அமெரிக்க நீடித்து வரும் போரால் ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையின்படி ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பலி எண்ணிக்கை உயர்வு
ரான் மீதான தாக்குல் இன்று 6-வது நாளை எட்டியிருக்கும் நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தம் கேட்டது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது .
ஈரானிற்கு ஆதரவாக லெபனானின் தாக்குதல்
ஈரான் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
ஈரானின் போர்கப்பலையும் வீழ்த்திய அமெரிக்கா
ஈரானின் போர்கப்பலையும் அமெரிக்கா சுட்டி வீழ்த்தியுள்ளது .இதில் 8௦ கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.
லெபனானின் பகுதிகளையும் தாக்கிய இஸ்ரேல்
லெபனானின் ஹிஸ்புல் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரானுக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்திருந்த நிலையில் . அதற்கு பதில் தாக்குதலாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் 50 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளைம் தாக்கி வரும் ஈரான்
ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில் பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரசு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
அத்துடன் இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது
ஒத்தி வைக்கப்பட்ட இறுதிச்சடங்கு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மூத்த மதகுரு காமேனியின் (86) உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, டெஹ்ரானில் நேற்று மாலை நடைபெறவிருந்த நிலையில்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.