ஈரானின் புதிய உச்ச தலைவராகிறார் ”கமேனி மகன் மொஜ்தபா” : வெளியுறவு கொள்கைகளில் மாற்றம்?

வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு, கமேனியின் மகன் உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஈரான் அரசின் கொள்கை சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Khamenei's son Mojtaba becomes Iran's new Supreme Leader!
Khamenei's son Mojtaba becomes Iran's new Supreme Leader!source:google
1 min read

US, Israel Attack on Iran News in Tamil :Khamenei's son Mojtaba becomes Iran's new Supreme Leader!

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதல்

ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியது. தெஹ்ரானின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மூன்று இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

கமேனியின் அலுவலகம் தான் இலக்கு

மேலும் இந்த தாக்குதல்கள் ஈரான் தலைமை மதகுரு கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் நடைபெற்றது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பிக்க, அடுத்து அமெரிக்க படைகளும் களமிறக்கப்பட்டன.

தலைநகர் டெஹ்ரானில், கமேனி கூட்டம் நடத்த தங்கி இருந்த கட்டிடம் மீது, துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. ஒரே சமயத்தில் 30 ஏவுகணைகள் வீசப்பட, அந்த கட்டிடம் தரைமட்டமானது.

ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிரிழப்பு

இந்த தாக்குதலின் போது 86 வயதான ஈரான் மூத்த தலைவர் கமேனி கொல்லப்பட்டார். மற்றும் அவரது மகள், மருமகன், பேத்தி பலியானார்கள்.

அடுத்த கட்டிடத்தில் இருந்த அமைச்சர்களும், ராணுவ-அரசு உயர் அதிகாரிகளும் அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இடைக்கால உச்ச தலைவர்

ஈரான் அரசியலமைப்பின் படி, நிபுணர்கள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மூத்த ஷியா மதகுருவாக இருக்க வேண்டும்.

அதன்படி, மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராஃபி இடைக்கால உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

32 ஆண்டுகளாக அயதுல்லா கமேனி வகித்து வந்த ஈரானின் உச்ச தலைவர் பதவிக்கான போட்டியில் அவரது மகன் மொஜ்தபா கமேனி உள்ளதாக கூறப்பட்டது.

தலைவரான கமேனி மகன் முஸ்தபா

இந்நிலையில், மறைந்த அலி அயத்துல்லா கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி (வயது 56) , ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசு அரசியலை எதிர்க்கும் ஈரான்

வாரிசு அரசியலை ஈரான் அரசு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் கமேனியின் மகன் உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளது ஈரான் அரசின் கொள்கை சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in