

இளம் தலைமுறையினரை காக்க சட்டம்
புகைபிடிப்பதை முற்றிலுமாக தடை செய்வது அல்லது ஒழிப்பது என்ற இலக்கை நோக்கி பிரிட்டன் பயணித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இளைய தலைமுறையினரை, புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்க வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிகரெட் வாங்கத் தடை
அதன்படி, பிரிட்டனில் 2008ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 2009 ஜனவரி 1ம் தேதி முதல் பிறந்தவர்கள் சிகரெட்டுகள் வாங்குவதை தடை செய்யும் சட்டம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கடுமையான கட்டுப்பாடுகள்
இந்த சட்டத்தின்படி, 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அன்று மற்றும் அதன் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் மற்றும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் வாங்க தடை விதிக்கப்படும்.
வரவேற்பும், ஆதரவும்
மேலும் புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த சட்டத்தை ஒரு தரப்பினர் வரவேற்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் இந்த சட்டம் தனிநபர் உரிமையை பாதிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
புகைப்பதை நிறுத்தும் இளைஞர்கள்
இந்தச் சட்டம் காலபோக்கில் இளைஞர்களிடையே புகைப்பழக்கத்தை குறைக்க உதவும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
புகையற்ற தலைமுறை
சிகரெட் விற்பனையை நிரந்தரமாகத் தடை செய்வதன் மூலம் ஒரு "புகையற்ற தலைமுறையை" உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. 2027ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புகைபிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை ஓராண்டு உயர்த்தவும் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வருங்கால தலைமுறையினருக்குப் புகையிலை விற்பனை செய்யப்படுவது படிப்படியாக தடை செய்யப்பட்டு, பின்னர் முழுமையாக விற்பனை தடுக்கப்படும்.
புகைப்பழக்கமற்ற நாடாகும் பிரிட்டன்
2030ம் ஆண்டிற்குள் 'புகைப்பழக்கமற்ற' (smoke-free) நாடாக மாற்றும் தனது லட்சியத்தை ஐக்கிய ராச்சிய அரசு அறிவித்தது. 'புகைப்பழக்கமற்ற நிலை' என்பது, ஒட்டுமொத்த மக்கள் தொகையிலும் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் விகிதத்தை 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைப்பதே ஆகும்.
==================