”வரலாற்றில் முதன்முறை, டிரம்ப், ஜின்பிங், புதின் சந்திப்பு” : சீனாவில் உச்சிமாநாடு, உலக அமைதிக்கு வழி வகுக்குமா...!

உலக வரலாற்றில் முதன்முறையாக மூன்று வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்திக்க இருப்பது, அமைதிக்கு வழி வகுக்குமா என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
meeting the leaders of three major power, in world history as raised expectations, pave way to world peace
meeting the leaders of three major power, in world history as raised expectations, pave way to world peace source:thamizhalai,ai generated
1 min read

வல்லரசு நாடுகள்

உலக அளவில் வல்லரசு நாடுகளாக பார்க்கப்படுவது அமெரிக்கா, ரஷ்யா, சீனா. இவற்றின் அதிபர்களாக இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

டிரம்ப், புதின், ஜின்பிங்

அமெரிக்க அதிபராக இருப்பவர் டொனால்டு டிரம்ப். சீன அதிபர் ஜி ஜின்பிங். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இவர்கள் மூன்று பேரும் வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் சந்திக்க இருக்கிறார்கள்.

உலக ராஜதந்திர வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு மைல்கல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நவம்பர் 19 அதாவது நாளை, சீனாவில், நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு உலக அமைதிக்கான மிக முக்கிய வரலாற்றுத் தொடக்கமாகப் பார்க்கிறது.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு

சீனாவின் தென்பகுதியில் உள்ள முக்கிய தொழில்நுட்ப நகரமான ஷென்செனில் (Shenzhen) இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. அங்கு நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்று, மிக முக்கிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்களைப் பற்றி விவாதிக்கச் சந்திக்கவுள்ளனர்

அமெரிக்கா - ரஷ்யா அணுசக்தி கட்டுப்பாடு

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இருந்த அணுசக்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' (New START) கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் உலகின் மிகப்பெரிய இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையே எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

அணு ஆயுதப் பெருக்கத்தைத் தடுக்க சீனாவையும் உள்ளடக்கிய ஒரு புதிய முத்தரப்பு ஒப்பந்தத்திற்கான அடித்தளத்தை அமைக்க டிரம்ப் விரும்புகிறார்.

ஈரான் விவகாரம் - முக்கிய விவாதம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழல் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து மூன்று வல்லரசுத் தலைவர்களும் முக்கியமாக விவாதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

வல்லரசுகளுக்கு இடையேயான உறவுகளில் நம்பகத்தன்மை, உலக அமைதியைப் பாதுகாப்பது குறித்து ஆழமான விவாதங்களில் தலைவர்கள் ஈடுபடுகின்றனர்.

ஐநா சபை வரவேற்பு

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் இந்தச் சந்திப்பை உலக அமைதிக்கான ஒரு முக்கிய மைல்கல் என்று வரவேற்றுள்ளார்.

முக்கிய உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அணுசக்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால், அதில் ஐ.நா. முழுமையாகப் பங்கேற்று, அந்த முயற்சி வெற்றி பெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

==================