”வேலையை விட்டால் 10 மாதங்கள் 80% ஊதியம்” : கூகுள், மைக்ரோசாப்ட் வரிசையில் மெட்டா ஆஃபர்! : ஊழியர்களை வெளியேற்ற உத்தி..!

ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறினால் 10 மாதங்கள் 80% சம்பளம், என்று அறிவித்து இருக்கிறது மெட்டா நிறுவனம்.
Meta announced employees who leave the company will receive 80% of their salary for 10 months
Meta announced employees who leave the company will receive 80% of their salary for 10 months.source:thamizhalai,ai generated
2 min read

தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிரடி மாற்றங்கள்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிறுவனங்களின் வேலை செய்யும் முறையை மாற்றி வரும் நிலையில், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

மெட்டா நிறுவனமும் அதிரடி

தற்போது இந்தப் பட்டியலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டாவும் இணைந்துள்ளது.

வெளியேறும் ஊழியர்களுக்கு சலுகைகள்

நிறுவனத்தை விட்டு தாங்களாகவே வெளியேற விரும்பும் ஊழியர்களுக்கு நிதி உதவி மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான ஆதரவு வழங்கும் திட்டத்தை அந்நிறுவனம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்சில் இருந்து தொடங்கும் நடவடிக்கை

மெட்டாவின் இந்தத் திட்டம் முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. பிரான்சில் மெட்டா நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஏறத்தாழ 100 பேரை இந்தத் திட்டம் பாதிக்கக்கூடும் என பிரான்ஸ் நாட்டின் 'லா லெட்ரே' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், எந்தெந்தப் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

மேலும், இது தொடர்பான இறுதி முடிவுகள் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே அமையும் எனக் கூறப்படுகிறது.செய்தி அறிவிப்புகள்

ஊழியர்களுக்கு அதிரடியாக சலுகைகள்

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள நிதி உதவியாகும். மெட்டாவில் ஒருவர் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 2.15 மாதச் சம்பளத்திற்கு இணையான தொகையை இழப்பீடாக வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதனுடன், 10 மாதங்கள் வரை 'மொபிலிட்டி லீவ்' எனப்படும் வேலை மாற்றத்திற்கான கால அவகாசமும் வழங்கப்பட உள்ளது. இந்தக் காலத்தில் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் 80 சதவீதம் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வேலையை தேடிக்கொள்ள அவகாசம்

இதன் மூலம் நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்கள் உடனடியாக வருமானமின்றித் தவிக்கும் நிலையைத் தவிர்க்க முடியும்.

வேலையை விட்டு வெளியேறும் ஊழியர்கள் புதிய துறையில் பயிற்சி பெறுவதற்கும், வேறு நிறுவனங்களில் வேலை தேடுவதற்கும் மெட்டா உதவ முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சொந்த தொழில் தொடங்க உரிய ஆலோசனை

சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஊழியர்கள் தங்களது அடுத்தகட்ட வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கு ஓரளவு அவகாசம் கிடைக்கும்.

பணியாளர்களை குறைக்கும் நிறுவனங்கள்

மெட்டா மட்டுமின்றி மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு தன்னார்வ வெளியேற்றத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் தகுதி பெறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், கூகுள் நிறுவனம் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு சலுகைகளை விரிவுபடுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் பெரிய பாதிப்பு

இந்த மாற்றங்களுக்கு முக்கியமான பின்னணியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பார்க்கப்படுகிறது. முன்பு பல ஊழியர்கள் இணைந்து செய்த பணிகளை தற்போது மேம்பட்ட ஏஐ கருவிகளின் உதவியுடன் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே செய்ய முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.

============================