உலகம் முழுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவை பாதிப்பு : பயனர்கள் கடும் அவதி...! : நடந்தது என்ன?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகளில் ஏற்பட்ட திடீர் நெட்வொர்க் மற்றும் சர்வர் கோளாறால், நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பயனர்கள் பாதிக்கப்பட்டனர் ...
Microsoft Network has went down on yesterday an Affects people Throughout the world
Microsoft Network has went down on yesterday an Affects people Throughout the worldAi Generated
1 min read

திடீரென முடங்கிய மைக்ரோசாஃப்ட் சேவைகள்:

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், அலுவலகபணிகள், தகவல் பரிமாற்றம், ஆன்லைன் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான சேவைகளை வழங்கி வருகிறது.

குறிப்பா, அவுட்லுக் மூலம் மின்னஞ்சல் அனுப்புவது, மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மூலம் அலுவலக கூட்டங்களில் பங்கேற்பது என உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இந்த சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், நவம்பர் 12-ம் தேதி திடீரென மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளில் கோளாறு ஏற்பட்டது.

74 நாடுகளில் பதிவான புகார்கள்:

இந்த சேவை முடக்கம் ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் மட்டும் நின்றுவிடாமல் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. இணையதள சேவை பாதிப்புகளை கண்காணிக்கும் Downdetector தளத்தில், சுமார் ஒரு மணி நேரத்திற்குள் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து புகார்கள் பதிவாகின.

அமெரிக்காவில் மட்டும் அவுட்லுக் சேவை தொடர்பாக சுமார் 1.3 லட்சம் புகார்கள் உச்ச அளவில் பதிவாகின. இந்தியாவிலும் இந்தப் பாதிப்பு உணரப்பட்டது.

நவம்பர் 13-ம் தேதி காலை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் 800-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வர்களில் ஏற்பட்ட கோளாறுதான் காரணமா :

இந்த பிரச்னை குறித்து விளக்கமளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது உள்கட்டமைப்பில் (Infrastructure) இருந்த பல சர்வர்கள் எதிர்பாராத விதமாக செயலிழந்ததாக தெரிவித்தது.

இதனால் செயல்பாட்டில் இருந்த மற்ற சர்வர்கள் மீது கூடுதல் சுமை ஏற்பட்டது. இந்த சுமை காரணமாகப் பயனர்கள் சேவைகளை அணுகுவதில் இணைப்பு சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில கட்டமைப்பு மாற்றங்களுக்கும் இந்தப் பிரச்னைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் நிறுவனம் ஆய்வு செய்தது.

ChatGPT , Claude சேவைகளிலும் பாதிப்பு :

மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்ட இந்த பாதிப்பு அதன் சொந்த செயலிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

மைக்ரோசாஃப்ட் 365 சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள OpenAI நிறுவனத்தின் ChatGPT மற்றும் Anthropic நிறுவனத்தின் Claude ஆகிய AI சேவைகளின் சில இணைப்புகளும் பாதிக்கப்பட்டன.

இதனால மைக்ரோசாஃப்ட் கணக்குகளிலிருந்து மின்னஞ்சல், காலண்டர் உள்ளிட்ட தகவல்களை பெறும் வசதிகளை பயன்படுத்திய சிலருக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன.

========================