

ஈரானின் அணுசக்தி திட்டங்களை தடுக்கும் வகையில், இஸ்ரேல் போர் தொடுத்தது.
ஈரானும் பதிலடி கொடுக்க, இப்போதும் தன் பங்கிற்கு அமெரிக்காவும் களத்தில் உள்ளது.
இருதரப்புக்கும் வேறு சில நாடுகள் ஆதரவு அளித்தால், மூன்றாவது உலகப் போர் வருவதை யாராலும் தடுக்க முடியாது.
ஒருவேளை யாராவது அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், நிச்சயம் பேரழிவுதான்.
இனி பல தலைமுறை இந்த பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவசரப்பட்டு போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவுக்கு உலக அளவில் கண்டனம் வலுத்து வருகிறது.
இந்தச் சண்டை பற்றி கருத்து தெரிவித்த நோபல் பரிசு பெற்றவரும், ஈரானில் மகளிர் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடி வரும் நர்கீஸ் முகமதி, போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது.
மனித உரிமைகள், சுதந்திரம் என எதையும் போர் தராது. அமெரிக்காவின் குண்டுகளினால் ஈரான் மக்களுக்கு விடுதலை கிடைக்காது, என்று கூறியிருக்கிறார்.
இத்தகைய சண்டைகள் வளர்ச்சியையும், மனித குலத்தையும் நாசம் செய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நர்கீஸ் முகமதிர் 2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
===