Nepal Protest: வலைதளங்களுக்கு தடை, நேபாளத்தில் வன்முறை, உயிரிழப்பு

Nepal Gen Z Protest on Social Media Ban: நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடையை எதிர்த்து, போராட்டத்தில் குதித்துள்ள இளைஞர்கள் வன்முறை ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Nepal Gen Z Protest on Social Media Banned By Nepal Government News in Tamil
Nepal Gen Z Protest on Social Media Banned By Nepal Government News in Tamil
1 min read

சமூக வலைதள பயன்பாடு அதிகரிப்பு :

Nepal Gen Z Protest on Social Media Ban: உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி பயன்படுத்தி வருகிறார்கள். இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு :

Nepal Ban 26 Popular Social Media Platforms : நமது அண்டை நாடான நேபாளத்தில் ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற உள்ளீடுகளை கண்காணிக்கவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. புதிய விதிமுறைகளை வகுக்கவும் அந்நாட்டு அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி சமூக வலைதளங்களை பதிவு செய்ய அந்நாட்டு அரசு ஏழு நாள் அவகாசம் வழங்கியிருந்தது. ஆனால், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், யூ டியூப், எக்ஸ், லிங்க்டுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை.

சமூக வலைதளங்கள் முடக்கம் :

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், இவற்றை முடக்கி நேபாள அரசு உத்தரவு(Nepal Govt Bans Social Media) பிறப்பித்தது. செய்தி, பொழுது போக்கு மற்றும் வணிக காரணங்களுக்காக பயனர்கள் பெரிதும் சார்ந்து இருந்த இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவையும் முடக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இளைஞர்கள் எதிர்ப்பு, போராட்டம் :

குறிப்பாக ஜென் இசட் ( Gen Z ) எனப்படும் 2003ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தடையை நீக்க வேண்டும். ஊழல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய அவர்கள், நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்களை(Nepal Gen Z Protest) முன்னெடுத்தனர். தெருக்களில் ஒன்று கூடுவதற்கு அரசு தடை விதித்த போதும், அதை மீறிய பொதுமக்கள், கிளர்ச்சியில் ஈடுபட வன்முறை வெடித்தது.

கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கிச்சூடு :

தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக் கணக்கானோர் தெருக்களில் கூடி பேரணியாக சென்றனர். நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் போலீசாருடன் அவர்கள் கைகலப்பில் ஈடுபட, கண்ணீர் புகை குண்டு வீச்சில் தொடங்கி, துப்பாக்கிச்சூடு வரை நடத்தப்பட்டு இருக்கிறது.

15 பேர் பலி, 250 பேர் படுகாயம் :

ராணுவமும் களத்தில் குதித்த கா்மாண்டு நகரமே போர்க்களமாகி இருக்கிறது. துப்பாக்கி சூட்டில் 15க்கும் மேற்பட்டோர்(Nepal Violence) உயிரிழந்த நிலையில் தொடர் வன்முறையில் 250க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : டிரம்பிற்கு இந்தியா ’ஷாக்’: ஐநா கூட்டத்தை புறக்கணிக்க மோடி முடிவு

ஊரடங்கு அமல், பெரும் பதற்றம் :

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு(Nepal Curfew News in Tamil) உள்ளது. மரக்கட்டைகள், தண்ணீர் பாட்டில்களை கொண்டு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பொதுமக்களின் ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேபாள அரசு திணறி வருகிறது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in