
Gen Z இளைஞர்கள் கிளர்ச்சி, பின்னணியில் யார்?
Nepal Government Collapse in Tamil : இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் வன்முறை சம்பவங்களால் பற்றி எரிகிறது. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து Gen Z இளைஞர்கள் நடத்திய போராட்டம்(Nepal Gen Z Protest) கலவரத்தில் முடிந்தது. நாடே போர்க்களமாக காட்சியளிக்க 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறைகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவத்தின் வசம் தலைநகர் காத்மாண்டு ஒப்படைக்கப்பட்டு, படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது. ஆயுதங்களை ஒப்படைக்குமாறு இளைஞர்களுக்கு ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேபாள கலவரத்தில் உலக அரசியல் :
சமூக ஊடகங்களுக்கு தடை(Social Media Ban in Nepal), இப்படிப்பட்ட கிளர்ச்சிக்கு காரணமா? உண்மையான பின்னணி என்ன? இளைஞர்களை தூண்டி விட்டது யார்? என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன. சமூக ஊடகங்களுக்கு தடை என்பது நேபாளத்தின் உள்நாட்டு பிரச்சினை போல தெரிந்தாலும், உண்மையில் பெரிய அளவில் உலக அரசியல் அதில் அடங்கி இருக்கிறது. இதில், அரசியல் சதுரங்கத்தை விளையாடுவது சீனாவும், அமெரிக்காவும் தான்.
சமூக ஊடகங்கள் - டிஜிட்டல் பாதுகாப்பு :
சமூக ஊடகங்கள் உலகளவில் பெருகி விட்ட நிலையில், அவை ஏதோ ஒரு நாட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. டிஜிட்டல் பயன்பாட்டிற்கு இணையாக மோசடிகளும் பெருகி விட்டன. இவற்றை கட்டுப்படுத்த, கண்காணிக்க டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.
சீனா, அமெரிக்கா - டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பு :
அண்டை நாடான சீனா, டிஜிட்டல் பாதுகாப்புக்காக, ஜி.எஸ்.ஐ., எனப்படும் சர்வதேச பாதுகாப்பு முன்னெடுப்பு என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அதேபோன்று, ஐ.பி.எஸ்., எனப்படும் இந்தோ - பசிபிக் உத்தி என்ற பெயரில் அமெரிக்காவும் டிஜிட்டல் பாதுகாப்பு கவச முறையை கொண்டு இருக்கிறது. இந்த டிஜிட்டல் கவசங்களை வைத்து, நேபாளத்தை தங்களுக்கு கீழ் கொண்டு வர சீனாவும், அமெரிக்காவும் முயற்சித்து வருகின்றன. இதன் பின்னணி தான் வன்முறை(Nepal Turmoil Reason), ஆட்சிக் கவிழ்ப்பு,
அடிபணிய மறுத்த நேபாளம்
பாதுகாப்பு டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் நேபாளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தெற்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்துவதே சீனாவின் நோக்கம்(China on Nepal). எனவே, அதில் இணையுமாறு நேபாளத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது சீனா. ஆனால், இதை ஏற்க நேபாள அரசு மறுத்து விட்டது(Nepal Government Fail). நேபாளத்தின் வெளியுறவு கொள்கைக்கு எதிராக யாருடனும் கூட்டு சேர முடியாது என்பதில் பிரதமர் சர்மா ஒலி உறுதியாக நின்றார். இதன் மூலம் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் குட்டி நாடான நேபாளம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
இளைஞர்கள் வன்முறை - வெளிநாட்டு சதி :
தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இமயமலை அடிவாரத்தை இழுத்து விடலாம் என்ற சீனாவின் கனவு தகர்க்கப்பட்டது. ஆட்சியை கவிழ்க்க சரியான நேரம் பார்த்து காத்திருந்த நிலையில், வெளிநாட்டு சமூக ஊடகங்களுக்கு தடை என்ற நேபாள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வசதியாக கிடைத்தது. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டதால், குழப்பத்தில் ஆழந்த இளைஞர்கள் வெளிநாட்டு சதிக்கு இரையாக, வன்முறை பூமியானது நேபாளம்.
வன்முறையை தூண்டி விட்ட சீனா :
சீனாவை புறந்தள்ளி விட்டு, அமெரிக்காவின் ஐ.பி.எஸ்., டிஜிட்டல் கட்டமைப்பை ஏற்கும் வகையில், பல கோடி ரூபாய் மானியத்தை நேபாள அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. அமெரிக்காவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டதால், கொதித்தெழுந்த சீனா, இளைஞர்களை தூண்டி விட்டு, வன்முறை வெறியாட்டம் நடத்த செய்து, பிரதமர் சர்மா ஒலியை பதவி விலகச் செய்து இருக்கிறது.
பயமுறுத்தும் பிரசாரம் மூலம் வன்முறை :
'பேஸ்புக், யு டியூப்' தளங்களில் சீன ஆதரவாளர்கள் பொய்யான தகவல்களை பரப்பினர். நேபாளத்தின் இறையாண்மைக்கு அமெரிக்கா அச்சுறுத்தலாக இருப்பதாகவும்(America on Nepal), இதற்கு சர்மா ஒலி(KP Sharma Oli) அரசு துணை போவதாகவும் அச்சுறுத்தல் பிரசாரம் செய்யப்பட்டது. சமூக ஊடக தளங்கள் என்பது இருமுனை கூர்மையான கத்தி போன்றது. சீனாவுக்கு எதிராக நேபாள அரசு எடுத்த அந்த ஆயுதம், இப்போது சர்மா ஒலி அரசையும் பதம் பார்த்து இருக்கிறது.
சர்மா ஒலி அரசை பதம்பார்த்த கத்தி :
அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கிளர்ச்சியாளர்கள் ஓட ஓடி விரட்டியது, உயிருக்கு பயந்து அவர்கள், ஹெலிகாப்டர்களில் தப்பியது, அரசு அலுவலகங்கள்(Nepal Government Collapse) சூறையாடல் போன்ற சம்பவங்கள், இலங்கையில் நடைபெற்ற வன்முறை, கலவரத்தை நினைவுபடுத்தின.
இனி நேபாளத்தில் புதிய அரசை யார் அமைப்பது, அதை ஆட்டுவிப்பது அமெரிக்காவா? அல்லது சீனாவா? போன்றவற்றை காலம் தான் தீர்மானிக்கும்.
=================