’ஹோர்முஸ் வழியாக எந்த கப்பலுக்கும் அனுமதி இல்லை’ : டிரம்ப் அதிரடி அறிவிப்பு : இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு?

US Iran War Update : ஈரான் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை உடன்பாடை எட்டாத நிலையில் ஹோர்முஸ் வழியாக இனி எந்த கப்பலுக்கும் அனுமதி அளிக்க போவதில்லை என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
"No more ships allowed through Hormuz" - Donald Trump's announcement, India may face fuel shortage
"No more ships allowed through Hormuz" - Donald Trump's announcement, India may face fuel shortagegoogle
1 min read

ஈரான் அமெரிக்கா போர்

US Iran War Update : தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா போர் தீவிரமடைந்து இருக்கும் நிலையில் , சமீபத்தில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. லெபனான் மீதான இஸ்ரேலின் திடீர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை

இந்தநிலையில் .ஈரான் அமெரிக்கா இடையே பேச்சுவார்தையானது நடைபெற்ற நிலையில் அது தோல்வியில் முடிந்தது , இந்த நிலையில் ஈரான் அமரிக்காவின் போர் கப்பல்களுக்கு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் திடீர் அறிவிப்பு

ஈரான் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை உடன்பாடை எட்டாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ்டிரம்ப் திடீர் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,

அதன்படி அவர் ஹார்முஸ் வழியாக இனி எந்த கப்பலுக்கும் அனுமதி இல்லை , என்றும் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவரின் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஈரான் உடனான சந்திப்பு முதலில் உடன்பாடை எட்டும் சூழலே இருந்த நிலையில் ஆனால், மிக முக்கியமான அணுசக்தி விவகாரத்தில் இணக்கம் ஏற்படவில்லை.

எனவே, உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில், உலகின் மிகச்சிறந்த அமெரிக்கக் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடும் பணியைத் தொடங்கும். என்றும் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ?

ட்ிரம்பின் இந்த அறிவிப்பால் ஹோர்முஸ் வழியாக வரும் இந்திய கப்பல்களுக்கு பெரும் தடை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால், நமது நாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடானது ஏற்படும் என்று தெரிகிறது

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in