
இறுதிகட்டத்தை எட்டிய நோபல் பரிசு
Nobel Prize in Economics 2025 Winner Announcement : வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதைத்தொடர்ந்து இலக்கியத்திற்கு ஒருவருக்கும், அமைதிக்கு ஒருவருக்கு என வழங்கப்பட்டு, பொருளாதார நோபல் பரிசு எப்படி இருக்கும், பகிர்ந்தளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்பொழுது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
ஒரே துறையில் 3 பிரிவுகள்
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக (The theory of sustained growth through creative destruction) அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 பரிசுகளும் ஒரே துறையில், ஒரே பிரிவில் 3 நபர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரே துறையில், வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு - 3 விஞ்ஞானிகள்- மேரி பிரங்கோ(Mary E. Brunkow), பிரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமொன் சாகாகுச்சி(Shimon Sakaguchi)
இயற்பியல் - 3 ஆராய்ச்சியாளர்கள் - ஜான் கிளார்க்(John Clarke), மைக்கேல் எச். டெவோரெட்(Michel H. Devoret), ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis)
வேதியியல் - 3 ஆராய்ச்சியாளர்கள்- சுசுமா கிடகவா (Susumu Kitagawa), ரிச்சர்டு ராப்சன்(Richard Robson), உமர் யாகி. (Omar M. Yaghi)
இலக்கியம் - 1- லாஸ்லோ கிராஸ்னஹோர்கை( Nobel Prize in Literature 2025
(Lászlo Krasznahorkai)
அமைதி - Maria Corina Machado (மரியா கொரினா - Nobel Prize in peace 2025)
பொருளாதாரம் - ஜோயல் மோகிர்(Joel Mokyr), பிலிப் அகியோன்(Philippe Aghion) மற்றும் பீட்டர் ஹோவிட் (Peter Howitt)(Nobel Prize in economic 2025)
மேலும் படிக்க : இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு தான் - வென்ற எழுத்தாளர்!
6 பிரிவுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள்
மருத்துவத்தில் தொடங்கி இயற்பியல், வேதியியல் என பகிர்ந்தளிக்கப்பட்ட நோபல் பரிசு இன்று 6 வது நாளை எட்டியுள்ள நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 நபர்களுக்கு கூட்டாக பகிர்ந்தளிக்கப்பட்டது. 6 பிரிவுகளாக கொடுக்கப்பட்டு, தொடர்ந்து மருத்துவத்தில் தொடங்கி இன்று பொருளாதாரத்தில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், 6 பரிவுகளிலும் நோபல் பரிசு பெற்ற அனைத்து ஆராய்ச்சியாளர், மருத்துவர், உள்ளிட்டவர்களுக்கு உலக நாடுகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
=====