வேதியியலுக்கான நோபல் பரிசு: 3 ஆராய்ச்சியாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு

Nobel Prize in Chemistry 2025 Winners List : மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியலுக்கான நோபல் பரிசு ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவைச் சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
Nobel Prize in Chemistry 2025 Winners List Announcement
Nobel Prize in Chemistry 2025 Winners List Announcement
1 min read

வேதியலுக்கான நோபல் பரிசு :

Nobel Prize in Chemistry 2025 Winners List : வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானை சேர்ந்த சுசுமா கிடகவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், அமெரிக்காவை சேர்ந்த உமர் யாகி ஆகிய 3 ஆராய்ச்சியாளர்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கரிம கட்டமைப்பு உருவாக்கம்

உலோக - கரிம கட்டமைப்பை உருவாக்கியதற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 துறைகளுக்கு நோபல் பரிசு 3 ஆராய்ச்சியாளர்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசும் 3 ஆராய்ச்சியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தொடரும் நோபல் பரிசு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு -3 விஞ்ஞானிகள்- மேரி பிரங்கோ(Mary E. Brunkow), பிரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமொன் சாகாகுச்சி(Shimon Sakaguchi)

இயற்பியல் - 3 ஆராய்ச்சியாளர்கள்- ஜான் கிளார்க்(John Clarke), மைக்கேல் எச். டெவோரெட்(Michel H. Devoret), ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis)

வேதியியல் - 3 ஆராய்ச்சியாளர்கள்- சுசுமா கிடகவா (Susumu Kitagawa), ரிச்சர்டு ராப்சன்(Richard Robson), உமர் யாகி. (Omar M. Yaghi)

இலக்கியம் - அக்.,9

அமைதி - அக்.,10

பொருளாதாரம் - அக்., 13

மேலும் படிக்க : ஒரே நாட்டை சேர்ந்த 3 ஆய்வாளர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

மீதம் உள்ள 3 நோபல் பரிசு

3 நாட்களாக மருத்துவத்தில் தொடங்கி இயற்பியல், வேதியியல் என நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில். மீதம் உள்ள 3 நாட்களில் இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு நோப்ல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in