நார்வே அதிபருக்கு டிரம்ப் கடிதம் - பதிலளித்த ஜோனஸ்கர் ஸ்டோர்!

Jonas Gahr Støre Trump : 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
Norwegian Prime Minister Jonas Gahr Støre has responded to letter written to him by Donald Trump Latest News in Tamil
Norwegian Prime Minister Jonas Gahr Støre has responded to letter written to him by Donald Trump Latest News in TamilGoogle
2 min read

டிரம்ப் தொடர் சிக்கல்

Donald Trump Letter To Jonas Gahr Støre : அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மற்றும் புதுமைகளை தாண்டி, புதிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை வகுத்து வருகிறார் என சமூக ஆர்வலர்கள் முதல், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாடுகளுக்கு வரி, போர் நிறுத்த முயற்சியின் பேரில் மிரட்டல் என தொடர்ந்து இவரின் ஒவ்வொரு முடிவால் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை தாறுமாறாக தடம் புரண்டு கிடக்கிறது. நடுத்தர மக்கள் முதல் நகைபிரியர் வரை, நகை என்றாலே அனைத்தையும் மறந்து அச்சத்தில் ஆழந்து விடுகின்றனர். இதற்கு பல வித காரணங்கள் இருந்தாலும், இதற்கு முதன்மை டிரம்பின் வரிவிதிப்பு தான் என்கின்றனர் பலர்.

உலக நாடுகள் முழுவதும் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில், டிரம்பின் தொடர் புரட்சியாக பல அதிர்ச்சி நாள்தோறும் உலக மக்கள் அனைவருக்கும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசை எதிர்பார்த்த அவருக்கு அமைதி பரிசு கிடைக்காததால்,இருந்த அமைதியையும் இழந்து அரசியலுடன் உலக நாடுகளை அச்சுறுத்தி ஆட்சி நடத்தி வருகிறார்.

கிரீன் லேண்ட் கைப்பற்றும் முயற்சியில் டிரம்ப்

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் 8 போர்களை நிறுத்தி உள்ளதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்.ஆனால், 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அளிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, வரிவிதிப்பு என புதிய நாடுகளை சேர்த்தது மட்டுல்லாமல், 2025 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற பெண்ணின் நாட்டை சேர்ந்த அதிபர் மடூராவை கைது செய்து நாடு கடத்தியுள்ளார். மேலும், டென்மார்க் நாட்டின் கிரீன் லேண்ட் பகுதியையும் கைப்பற்றப்போவதாக தொடர் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

நார்வே நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதிய டிரம்ப்

இவையணைத்திற்கு இதுவே காரணம் என்று உறுதிப்படுத்தும் விதமாக நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு நார்வே பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோர் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில், நோபல் அமைதிப் பரிசைப் பொறுத்தவரை அதிபர் டிரம்ப் உள்பட அனைவருக்கும் தெளிவாக விளக்கியுள்ளேன். அந்தப் பரிசு நார்வே அரசாங்கத்தால் வழங்கப்படுவது அல்ல. ஒரு சுதந்திரமான நோபல் குழுவால் வழங்கப்படுகிறது. நார்வே, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் அறிவித்த வரி உயர்வுக்கு எங்கள் எதிர்ப்பை அவரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in