இந்தியா புதைக்கப்படும் : பதறிய பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் !

Pakistan Minister Khawaja Asif Statement About India : இந்தியாவின் அழுத்தம் தாங்கம் முடியாமல், எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
Pakistan Defence Minister Khawaja Asif Statement About India
Pakistan Defence Minister Khawaja Asif Statement About India
2 min read

சிந்தூர் தாக்குதல் :

Pakistan Minister Khawaja Asif Statement About India : காஷ்மீரின் பஹல்காமை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியநிலையில், அதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக மே 7-ந் தேதி இந்தியாவின் முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூரை நடந்தி வெற்றி கண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த சிந்தூர் ததாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்(Operation Sindoor). இதனை தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினர் பரஸ்பரம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்தியா பாகிஸ்தான் போர் பதட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 நாள் முடிவுக்கு பின்னர் தீர்வு கிடைத்தது.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பகிரங்கம் :

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று இந்தியாவுக்கு பதிலளிக்கும் விதமாக தனது வலைத்தள பக்கத்தில் இந்திய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகள், மே மாத (சிந்தூர் தாக்குதல்) தோல்வியில் இழந்த அவர்களின் கறைபடிந்த நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் தோல்வியுற்ற முயற்சியாகும். 0-6 மதிப்பெண்ணுக்கு கீழ் பெற்ற இத்தகைய மோசமான தோல்விக்கு பிறகும், ஒருவேளை மீண்டும் முயற்சித்தால் கடவுள் விரும்பினால் முந்தைய மதிப்பெண்ணைவிட கூடுதல் மதிப்பெண் பெறலாம். எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள்(Khawaja Asif on India Pakistan War). அப்போது இந்தியா அதன் போர் விமான இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும்” என்று பகிரங்கமாகவும், அடாவடியாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அவமதிப்பு வெற்றி

இந்தியாவின் சிந்தூர் தாக்குதலுக்கு நிலைகுலைந்த பாகிஸ்தான் தொடர்ந்து சமரசத்திற்கு இடம் கொடுத்தாலும், பஹல்காமில் இழந்த உயிர்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என இந்தியா எதற்கும் அச்சமில்லாமல் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதற்கு சான்றாக, தொடர்ந்து பல்வேறு நிலைகளில் இந்தியா எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், முன்னதாக நடைபெற்ற டி-20 உலக கோப்பையில் வெற்றியடைந்த இந்திய அணி, பாகிஸ்தான் அமைச்சரால் வழங்கப்பட்ட கோப்பையை கையில் இருந்து கூட பெறாமல், தனது வெற்றியின் உச்சத்தை வெளிப்படுத்தி அதே மைதானத்தில் வெற்றியை வெறும் கையில் கோலாகலமாக கொண்டாடியது. இதற்கு பல வித பாராட்டுகளும், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பீறிட்ட நிலையில், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா பாகிஸ்தான் அணியுடன் கைகூட குலுக்கி கொள்ளவில்லை, ஆனால் அதே போட்டியில் வெற்றி பெற்று சாதனையை பதிவு செய்தது.

மேலும் படிக்க : உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது : ராணுவ தளபதி எச்சரிக்கை!

தொடர் நெருக்கடியால் இந்த காழ்ப்புணர்ச்சி

தொடர் சாட்டை அடியை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வருவதால், செய்வதறியாது பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பகிரங்கமாக சமூக வலைதளத்தில் எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியா அதன் போர் விமான இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும் என்று வெறும் பேச்சு பேசி வருகிறார் என்று சமூக ஆர்வலர்கள் கதைத்து வருகின்றனர். மேலும் விரக்தி, தோல்விமனப்பான்மையே இந்த வெளிப்பாடு என பாகிஸ்தான் அமைச்சரை சுட்டி காட்டியுள்ள நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் மற்றும் டெம்ளேட்ஸ்களை பதிவு செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in