நேபாளத்தில் புதிய அரசுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு : போராட்டத்திற்கான பின்னணி என்ன?

நேபாளத்தின் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற பாலேந்திராஷா தலைமையிலான அரசிற்கு எதிராக போராட்ட களமாக மாறியுள்ளது மக்களின் எதிர்ப்பு.
People are strongly opposing the new government in Nepal, what is the background to the protest?
People are strongly opposing the new government in Nepal, what is the background to the protest? google
1 min read

நேபாளத்தின் புதிய அமைச்சரவை

நேபாளத்தின் புதிய பிரதமராக கடந்த மாதம் 27-ம் தேதி 35 வயதான பாலேந்திர ஷா பதவியேற்றார். கடந்த ஆண்டு அங்கு சர்மா ஒலி தலைமையிலான அரசு, கவிழ்ந்தது.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜென் ஸீ தலைமுறையினரின் போராடம்மும் வர்களின் வாக்கும் , அதன் பின்னர் இடைக்கால நேபாள அரசை சுசிலா கார்கி வழிநடத்தினார். இந்த நிலையில் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாலேந்திரா ஷா வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

எதிர்ப்பை பெற்றுவரும் பாலேந்திரா ஷா அரசு

நேபாளத்தில் அரசு கவிழ்ந்து புதிய ஆட்சியை பாலேந்திரா ஷா ஆட்சியை கைப்பற்றினர்.இந்நிலையில், அவரது அரசு மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது.

அவரது ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் கூட நிறைவடையாத நிலையில் மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கடும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்திற்கான காரணம்

இந்த நிலையில் இந்த தீடிர் போராட்டத்திற்கான காரணம் ,இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் 100 ரூபாய்க்கு கூடுதலான மதிப்பு கொண்ட பொருட்களின் மீது கட்டாயச் சுங்க வரியை விதிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பை காட்டி , போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மாணவர் அமைப்புகளை தடை செய்யும் அரசின் கொள்கை மற்றும் உள்துறை அமைச்சர் சுதான் குருங் மீதான சொத்து குவிப்பு வழக்கு மற்றும் நிதி முறைகேடு காரணமாக அவர் பதவி விலக வேண்டியும் , இது அனைத்தும் கண்டித்து அங்கு மாணவர்கள் , பொது மக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு எதிரான கொள்கை

புதிய அரசின் சுங்க வரிக் கொள்கை எல்லையோரத்தில் வசிக்கும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நேபாள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒரே நேரத்தில் அரசின் கொள்கை, மாணவர் அமைப்பினர் மற்றும் அமைச்சர் மீதான குற்றச்சாட்டு என்று மூன்று விதமான அழுத்தங்களை பாலேந்திர ஷாவின் அரசு தற்போது எதிர்கொண்டுள்ளது.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in