Pete Hegseth Impeachment : வெளியுறவு அமைச்சர் பதவி நீக்க முயற்சிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் முட்டுக்கட்டை..!

ஈரான் போர், வெனிசுலா மீதான ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் அதிகாரத்தை தவறாகபயன்படுத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது ...
Pete Hegseth Faces Impeachment Push Over 8 Allegations; Trump Ally Escapes Setback
Pete Hegseth Faces Impeachment Push Over 8 Allegations; Trump Ally Escapes SetbackGoogle
1 min read

பீட் ஹெக்செத் மீது பதவி நீக்கத் தீர்மானம்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் பீட் ஹெக்செத் (Pete Hegseth).

இவர் மீது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸ்ஸி பதவி நீக்க தீர்மானத்தைகொண்டுவந்தார்.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளில் சட்ட விதிகளை மீறியது, நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி போர்களை முன்னெடுத்தது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டன.

8 முக்கியக் குற்றச்சாட்டுகள் என்ன?

மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் ஹெக்செத் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ஈரான் மீது போரைத் தொடங்கி, தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், போரின்போது பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றும், ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்ததற்கு இவருடைய நிர்வாக நடவடிக்கைகளும் காரணம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தைத் தடுத்த அமெரிக்க நாடாளுமன்றம் :

இந்த நிலையில், நவம்பர் 10-ம் தேதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், பதவி நீக்கத் தீர்மானத்தின் 8 பிரிவுகளையும் பிரதிநிதிகள் சபையின் நீதித்துறைக் குழுவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் 211-204 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் ஹெக்செத் மீதான பதவி நீக்க நடவடிக்கையை முழு அவையில் முன்னெடுத்துச் செல்லும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்த தாமஸ் மாஸ்ஸிக்கு மற்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை.

ட்ரம்ப் ஆதரவு ஹெக்செத் பதவிக்கு உடனடி ஆபத்து இல்லை :

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹெக்செத்துக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார்.

பதவி நீக்க முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹெக்செத்துக்கு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப், அவரது செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார்.

இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹெக்செத், தான் மேற்கொண்ட அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் சட்டப்படியானவை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வாக்கெடுப்பால் பதவி நீக்க முயற்சி முடங்கியிருந்தாலும், இந்த விவகாரம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

====================