
PM Modi Receive Ghana National Award: 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றிருந்தார்.
உற்சாக வரவேற்பு :
அக்காராவில் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது. அங்கு வசிக்கும் அவரை அன்பாக வரவேற்றனர்.
இதையடுத்து கானா(Ghana) நாட்டின் அதிபர் மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்த பிரதமர்,
நல்லுறவு வலுப்பெறும் :
அதிபர் மஹாமாவுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. எங்கள் உறவுகள் இருநாட்டு மக்களுக்கு பயனளிக்கும். வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம் என்றார்.
கானா தேசிய விருது :
இதற்கிடையே, உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்'(The Officer of the Order of the Star of Ghana) என்ற தேசிய விருதைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார். 'இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக நான் பெற்றுக் கொண்டது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு :
இதுபற்றி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'தி ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா' விருதை(Ghana National Award) எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகிறேன். இந்த கௌரவம் நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம் மற்றும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது என பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார்.
============