PM Modi Big Update : ”உஸ்பெக் மொழியில் திருக்குறள்” : பிரதமர் மோடி கோரிக்கை...!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக உஸ்பேகிஸ்தான் சென்ற மோடி அங்கு இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்...
PM Modi instructed uzbek university to translate thirukural book to uzbek language
PM Modi instructed uzbek university to translate thirukural book to uzbek language Google
1 min read

உஸ்பெக் பல்கலைக்கழத்தில் மோடி :

இரண்டு நாள் பயணமாக உஸ்பேகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் குறிப்பாக அவர் அங்கு இருக்கக்கூடிய உஸ்பெக் பல்கலைக்கழத்தில் உரையாற்றியபொழுது அவர் தமிழ் மொழியின் தொன்மையையும் மற்றும் அதில் உள்ள திருக்குறள் புத்தகத்தின் மகிமையையும் அந்த நட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அதனை மொழிபெயர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

திருக்குறள் – உலகளாவிய வாழ்க்கை நெறி :

மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய திருக்குறள், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று முக்கிய தத்துவங்களை எடுத்துரைக்கிறது.

மொழி, இனம், மதம் ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதர்களுக்கு பொதுவான வாழ்க்கை நெறிகளை வழங்கும் நூலாக திருக்குறள் விளங்குகிறது.

இதனால் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் மொழி மீது அதிகரிக்கும் உலக ஆர்வம் :

சமீப ஆண்டுகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக திருக்குறள் தொடர்பான ஆராய்ச்சிகள் பல கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருக்குறளை மேலும் பல மொழிகளில் மொழிபெயர்த்து உலக மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியா – உஸ்பெகிஸ்தான் கல்வி ஒத்துழைப்பு :

உஸ்பேகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மிக முக்கியமாக கல்வி துறையில் பெரிய மாற்றம் கொண்டு வர உஸ்பேகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கல்வி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அது இரு நாடு மாணவர்களுக்கும் பெரிய உதவிகரமாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார் .

உலக அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கு புதிய அங்கீகாரம் :

திருக்குறளை உலகளவில் பரப்ப வேண்டும் என்ற அழைப்பு, தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சர்வதேச முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

திருவள்ளுவரின் சிந்தனைகள் உலக மக்களிடையே பரவுவதன் மூலம் மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் நல்லாட்சிக்கான கருத்துக்கள் பரவலாக சென்றடையும் என தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in