

ஐரோப்பாவில் இந்துக் கோவில்கள்
ஐரோப்பியா நாடுகளிலும் இந்து கோவில்கள் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வழிபாட்டுக்காக கோவில்களை கட்டி இருக்காங்க.
இங்கு பாரம்பரிய முறைப்படி பூசைகள் நடத்தப்படுது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மட்டுமல்லாம, பல மாகாணங்களில் தீபாவளி பண்டிகை அரசு விழாவாகவே கொண்டாடப்படுது.
அதுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது.
சிகாகோ அருகே இந்துக் கோவில்
இல்லினாய்ஸ் மாகாணத்தில சிகாகோ நகரின் புறநகரில் Aurora என்ற இடத்தில இந்து கோவில் ஒன்று உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான இந்துக்கள் வழிபாடு நடத்த வர்றாங்க.
பாலஸ்தீன இளைஞர் பாபோராகிஸ்
பாலடைன் (Palatine) பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்ட்ரோஸ் பாபோராகிஸ் (Alexandros Paporakis) 19 வயது இளைஞரான இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். ஒரு நிறுவனத்தில கேஷியரா வேலை பார்த்து வர்றாரு.
சக நண்பர் கொடுத்த துப்பு
இவர், இந்து கோவிலுக்குள் புகுந்து, இந்துக்குள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக, அவரது நண்பர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இந்துக்களை கொல்ல சதி
இதையடுத்து, உஷாரான போலீசார் உடனே, பாபோராகிசை கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாங்க. அவரது இருப்பிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், தீவிரமான வெள்ளே இனவாத கருத்துகள், இந்துக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஒன்று கைப்பற்றப்பட்டது.
இனவெறியோடு சதித்திட்டம்
குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கிற இந்திய வம்சாவளி மக்கள் மீது பாபோராகிஸ் கடும் வெறுப்பில் இருப்பது, அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற வெறியோடு திட்டமிட்டு இருப்பது இதன்மூலம அம்பலமானது.
சக நண்பர் முன்கூட்டியே யூகித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்ததால, இந்துக்கள் மீது நடத்தப்பட்ட இருந்த துப்பாக்கிச்சூடு தடுக்கப்பட்டது.
சதித்திட்டம் முறையடிப்பு, தோட்டாக்கள் பறிமுதல்
இதன்மூலமா பாபோராகிசின் சதித்திட்டமும் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கவச உடையை போலீசார் பறிமுதல் செஞ்சிருக்காங்க.
பாபோராகிஸ் வசமிருந்த சந்தேகத்திற்கு இடமான டிஜிட்டல் பதிவுகள், புகைப்படங்களை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைஞ்சி இருக்காங்க. மேலும், இந்தியர்களை கொல்ல தான் விரும்புவதாக பகிரங்கமாகவும் பேசி வந்து இருக்காரு பாபோராகிஸ்.
உயிர்ச்சேதம் தவிர்ப்பு
இப்போ நவராத்திரி சமயம் என்பதால, ஆயிரக்கணக்கான இந்துக்கள் கர்பா நடனத்திற்காக இங்கு கூடிவது வழக்கம், அந்த சமயத்தில பாபோராகிஸ் துப்பாக்கி சூடு நடத்தி இருந்த பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும்.
பாபோராகிஸ் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட பாபோராகிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாரு. சக நண்பரின் கணிப்பு, போலீசாரின் துரித நடவடிக்கை அமெரிக்கா வாழ் இந்தியர்களோட உயிரை காப்பாற்றி இருக்கு.
சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரிச்சு இருக்கு. வழிபாட்டுத் தலங்கள் மீதான அச்சுறுத்தல்களும் அதிகரித்து வரும் சூழலில் பெரிய சதித்திட்டமானது முறியடிக்கப்பட்டு இருக்கு.
ஓஹியோவில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் வட்தால் தாம் இந்து மந்திர் மீது கடந்த 3ம் தேதி செங்கற்களை கொண்டு மர்ம நபர்கள் தாக்கினாங்க. இதில் ஜன்னல்கள் உடைந்தன. கட்டிடத்தோட மேற்கூரையிலும் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்வசமா, கோவிலுக்குள் இருந்த இந்துக்கள் யாரும் காயமடையவில்லை.
இந்தியா வலியுறுத்தல்
இப்போது, இந்துக்கள் மீதான துப்பாக்கிச்சூடு சதி முறியடிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்து கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அப்படின்னு இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கு. தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசை கேட்டுக்கிட்டு இருக்கு.
மேலும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், இந்துக்கள் பாதுகாப்பா இருக்குமாறும் அறிவுறுத்தி இருக்கு.
====================