

இஸ்ரேல் - இடையேயான மோதல் நாளுக்குநாள் வலுத்து வரும் நிலையில், தலைநகர் டெஹ்ரான் மீது கடுமையான தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
கனடாவில் நடைபெற்று வரும் ஜி 7 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், 'நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
எவ்வளவு அவமானம், எவ்வளவு மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது.
நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். பதற்றங்கள் அதிகரிக்கும்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று இஸ்ரேலும் எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறது. டெஹ்ரானின் மையப்பகுதியிலிருந்து 3 லட்சம் மக்களை வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்றிரவு முதலே டெஹ்ரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதும் கவனிக்கத்தக்கது.
=============