”இடைத்தேர்தலில் தோற்றால், ஈரான் மீது போர்” : வரிந்து கட்டும் டிரம்ப் : நவ.3ல் அக்னி பரீட்சை..!

அமெரிக்காவில் நடக்க இருக்கிற இடைத்தேர்தலில் தனது கட்சி தோல்வியை சந்திச்சா, ஈரான் மீது மிகப்பெரிய அளவில போரை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்காராம் அதிபர் டொனால்டு டிரம்ப்
President Donald Trump plans to launch  major war against Iran, if he faces defeat midterm elections in usa
President Donald Trump plans to launch major war against Iran, if he faces defeat midterm elections in usasource:thamizhalai,ai generated
2 min read

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவோட அதிபரா 2024ம் ஆண்டு 2வது முறையா பொறுப்பேத்தாரு, டொனால்டு டிரம்ப். அரியணை ஏறியதில் இருந்து வரி விதிப்பு, வெனசுலா அதிபர் கைது, குடியேற்ற விதிகளில் அதிரடி மாற்றங்கள் அப்படின்னு, உலகையே திரும்பி பார்க்க வச்சாரு.

டிரம்பின் வெளியுறவு கொள்கைகள்

ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவோட நட்பாக இருந்த நாடுகள் எல்லாம், அதிருப்தியின் உச்சத்தை தொட்டன. இதுல இந்தியாவும் விதிவிலக்கல்ல.

அடுத்து இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டுக்காக ஈரான் மீது போர் தொடுத்தாரு டிரம்ப். இதுல அமெரிக்காவுக்கு 4 லட்சம் கோடி டாலர் அளவுக்கு செலவாகி இருக்கு. அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கு.

டிரம்ப் மீது அமெரிக்கர்கள் கோபம்

பெட்ரோல், டீசல், விலைவாசி உயர்வு மக்களின் கோபத்தை டிரம்ப் பக்கம் திரும்பி இருக்கு. இந்தநிலையில தான், நவம்பர் 3ம் தேதியான நாளை, டிரம்பிற்கு அக்னி பரீட்சை காத்திருக்கு.

அமெரிக்காவில் இடைத்தேர்தல்

அவர் அதிபரா பொறுப்பேத்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலை சந்திக்கிறது அமெரிக்கா. நாடாளுமன்ற கீழ்ச்சபையான பிரதிநிதிகள் சபைக்கு 435 உறுப்பினர்களும் தேர்தல் மூலமா தேர்ந்தெடுக்கப்பட இருக்காங்க.

மேல் சபையான செனட்டில், 100 இடங்களில் 35 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுது. 36 மாகாணங்களுக்கும் தேர்தல் நடக்குது.

செனட் அவையில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர்.

டிரம்ப் நிர்வாகத்தை தீர்மானிக்கும் தேர்தல்

2028 வரை டிரம்ப் அமெரிக்க அதிபரா இருக்க போறாரு. எனவே, அடுத்த 2 ஆண்டுகளுக்கு டிரம்ப் அரசோட நிர்வாகத்தை தீர்மானிக்கிற சக்தியா இந்த இடைத்தேர்தல் இருக்கிறது.

ஈரான் போர், தவறான பொருளாதார கொள்கைகள், விலைவாசி உயர்வு அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை ஆட்டம் காண வச்சிருக்கு. மக்களின் கடும் கோபமும் அவர் பக்கம் திரும்ப, இடைத்தேர்தலில் குடியரசு கட்சிக்கு வெற்றி என்பது எட்டாக்கனி தான் அப்படின்னு சொல்லப்படுது.

மக்கள் ஆதரவு சரிந்தது

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியபோது, அவருக்கான மக்கள் ஆதரவு 50 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக இருந்தது. ஆனால், அக்டோபர் மாதம் இந்த செல்வாக்கு 37 சதவீதமா சரிந்து கிடக்கு.

இடைத்தேர்தலில் சுமார் 20 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாக்களிக்க போறாங்க. 2024ல டிரம்பிற்கு ஆதரவா இருந்த இவங்க, இப்போ எதிரா திரும்பி, ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்க போறாங்க அப்படிங்கிறது தெரிய வருது.

ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால்..

தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றியை அதாவது நாடாளுமன்றத்தில பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினா, டிரம்பால் எந்த முக்கிய மசோதாவையும் கொண்டு வர முடியாது.

ஏன், ஈரான் போருக்கு ஒரு டாலர் செலவு செய்யணும் அப்படின்னாலும், நாடாளுமன்ற அனுமதி கட்டாயம்.

டிரம்ப் எதிர்கொள்ள போகும் நெருக்கடி

இந்தநிலையில், இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தால், ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட வாய்ப்பு இருப்பதா சொல்லப்படுது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் ஈரான் மேலே தாக்குதல் நடத்தும் டிரம்பின் நடவடிக்கையை ஆதரிப்பதா சொல்லப்படுது.

ஆனா, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டவங்க, பேச்சுவார்த்தை மூலமா ஈரான் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்

இடைதேர்தலுக்கு பிறகு, ஈரான் மீது பெரிய அளவில் குண்டுவீச்சு நடத்தப்பட "சாத்தியம்" இருப்பதா டிரம்ப் ஏற்கனவே சொல்லி இருந்தாரு.

ஈரான் கடுமையாக பலவீனமடைந்து விட்டது. பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. பணவீக்கம் 300% என்ற அளவுக்கு இருக்கு. கடற்படையும், விமானப்படையும் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.

எனவே, இப்போ பெரிய அளவில தாக்குதல் நடத்தினா, ஈரானை நிர்மூலமாக்கிட முடியும் அப்படின்னு டிரம்ப் நினைக்குறதா சொல்லப்படுது.

நான் அமைதியின் அதிபர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் டிரம்ப், ஈரானை ஒடுக்குவதன் மூலமா, உலக அமைதியை நிலைநாட்ட போறதாவும் சொல்லிக்கிட்டு வர்றாரு.

உலகமே எதிர்நோக்கும் தேர்தல் முடிவுகள்

எனவே, இடைத்தேர்தல் முடிவுகள் தான் அமெரிக்கா பெரிய அளவில போரில இறங்குமா? ஈரானின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை முடிவு செய்யப் போகுது. தேர்தல் முடிவுகளை பொறுத்தே, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் அமைதி என்பது தீர்மானிக்கப்பட இருக்கு.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி மாறி மாறி ஆட்சி செஞ்சாலும், இந்தியாவுக்கு அதிக ஆதரவு என்பது குடியரசு கட்சி மூலம் தான் கிடைச்சு இருக்கு.

டிரம்போட முதல் பதவிக்காலத்தின் போது, அவரை "இந்தியாவின் சிறந்த வெள்ளை மாளிகை நண்பர்" என்று பிரதமர் மோடியே சொல்லி இருந்தாரு.

இந்திய - அமெரிக்க உறவில் விரிசல்

ஆனா அவரோட 2வது பதவிக்காலத்துல எல்லாமே தலைகீழாகி போச்சு. வரி விதிப்பு, குடியேற்றம், விசா தொடர்பான பிரச்சினைகள், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய எதிர்ப்பு என டிரம்போட செயல்பாடுகள் இருநாட்டு நல்லுறவில விரிசலை ஏற்படுத்தியது உண்மைதான்.

எனவே, இடைத்தேர்தல் முடிவுகள் ஏற்படுத்த போகும் தாக்கம், இந்திய-அமெரிக்க உறவுகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் அப்படிங்கிறதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

====================