“ஈரானுடன் போர் இல்லை, ராணுவ மோதல் மட்டுமே” : அமெரிக்க அதிபர் டிரம்ப் புது விளக்கம்..!

அமெரிக்கா - ஈரான் இடையே நடப்பது போர் அல்ல, ராணுவ மோதல் மட்டுமே என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
President Donald Trump stated that between United States and Iran is not a war, but merely a military confrontation
President Donald Trump stated that between United States and Iran is not a war, but merely a military confrontationAI generated
1 min read

நடப்பது மோதல் தான்

ஆறுமாதங்களை கடந்தும் போர் முடிவுக்கு வராத சூழலில், அவ்வப்போது தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்தநிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இருநாட்டு மோதலில்

அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், வியட்நாம் மற்றும் ஆப்கனிஸ்தானுடன் அமெரிக்கா நடத்திய போருடன் இதனை ஒப்பிட முடியாது.

அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறோம்

இது அவ்வப்போது நிகழும் ராணுவ மோதல் மட்டுமே. நாங்கள் அவ்வப்போது தாக்குதலை தொடுக்கிறோம். அணு ஆயுதத்தை ஈரான் கொண்டிருக்காது. நாங்கள் அதை தடுத்துவிட்டோம்.

அணு ஆயுத திட்டம் தடுப்பு

ஈரானின் பிக்காக்ஸ் பகுதியில் (யுரேனியம் செறிவூட்டும் பகுதி) நடவடிக்கை எதுவும் இருப்பின் அதன் மீது நாங்கள் உடனடியாக தாக்குதலை நடத்துவோம். ஈரான் முழுவதையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

ஈரான் தப்பு செய்தால் தாக்குவோம்

ஏதாவது தவறாக நடந்தால் நாங்கள் நிச்சயம் தாக்குவோம். எங்கள் தாக்குதல் கடுமையானதாக இருக்கும். ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கான ஈரானின் ரேடார், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் அழித்துவிட்டோம்.

அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஹார்மூஸ்

அங்கு இருந்த கண்ணிவெடிகளை, அமெரிக்காவின் கண்ணிவெடிகள் அகற்றும் கப்பல்கள் அகற்றிவிட்டன. ஹார்மூஸ் ஜலசந்தி இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

நாங்கள் வெனிசுலாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். அதேபோல், ஈரானையும் எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்.

ஈரான் மீண்டெழ 25 ஆண்டுகள்

கடைசியாக நாங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு கடந்த சில நாட்களாக எந்த துப்பாக்கிச்சூடும் அங்கு நடைபெறவில்லை. நாங்கள் எங்கள் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தினால் கூட ஈரான் மீண்டெழ 25 ஆண்டுகள் ஆகும்.

சீனாவின் தலையீடு இல்லை

ஈரான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதில் பெரிதாக தலையிடவில்லை.

இதனிடையே, “அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கிறது. எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள ஈரான் ராணுவம் தயாராக உள்ளது. எங்களது ஆயுதங்கள் எதிரிகளை துவம்சம் செய்யும்” என்று ஈரான் ராணுவ மூத்த தளபதி அலிரேசா எல்ஹாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in