
வாஷிங்டன் போலீஸ் பாதுகாப்பு :
அமெரிக்காவின் தலைநகராக இருப்பது வாஷிங்டன் நகரம். அனைத்து நாடுகளின் தூதரகங்கள், ஐநா தலைமைச் செயலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் இங்கு இருப்பதால், பலத்த பாதுகாப்பு எப்போதும் இருக்கும். இங்கு செயல்பட்டு வரும் போலீஸ்துறை, மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. போலீஸ் துறை மேயர் முரியல் போவ்சர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது.
டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு :
வாஷிங்டனில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக கூறி, அங்கு செயல்பட்டு வரும் போலீஸ் துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது, ” வாஷிங்டனில் குற்றங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ளன. கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வாஷிங்டனில் பாதுகாப்பில்லை :
அரசு ஊழியர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணியருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் போலீஸ் துறையை என் அதிகாரத்தின் கீழ் பயன்படுத்த தீர்மானிக்கிறேன். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு :
டிரம்பின் இந்த உத்தரவால் வாஷிங்டன் போலீஸ் துறையில் பணியாற்றுவோர் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். மேயர் முரியல் போவ்சரும் டிரம்பின் உத்தரவை வன்மையாக கண்டித்து இருக்கிறார். மாகாண உரிமைகளை பறிக்க அதிபர் டிரம்ப் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
=====