"நான்தான் சிறந்த அதிபர்” : தம்பட்டம் அடித்த டிரம்ப் : லிங்கன், ஓபாமா, பைடன் குறித்து கருத்து, வலுக்கும் எதிர்ப்பு...!

’ஆபிரகாம் லிங்கனை விட நானே சிறந்த அதிபர்” என்று பட்டியல் ஒன்று வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.
President Trumpsparked controversy  releasing a list claiming, "I am a better president than Lincoln
President Trumpsparked controversy releasing a list claiming, "I am a better president than Lincoln generated
1 min read

Donald Trump regularly declares himself the greatest president in American history. In August 2026, he shared a customized ranking on Truth Social placing himself alone in "The Greatest" tier, above Abraham Lincoln and George Washington

அமெரிக்க அதிபர் டிரம்ப்

சர்ச்சைக்கு பெயர் போன டொனால்டு டிரம்ப், ஆபிரகாம் லிங்கன், ஜார்ஜ் வாஷிங்டன் போன்ற வரலாற்றுச் சிறந்த அதிபர்களை விட தானே அமெரிக்காவின் சிறந்த அதிபர் என தன்னை முதன்மைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஒபாமா, பைடன் தோல்வியடைந்தவர்கள்

முன்னாள் அதிபர்கள் புகைப்படங்களுடன் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ட்ரம்ப், லிங்கன், வாஷிங்டன் போன்ற வரலாற்றுத் தலைவர்களை 'சிறந்தவர்கள்' என பட்டியலிட்டுள்ளார். ஒபாமா, ஜோ பைடன் ஆகியோரை 'தோல்வியடைந்தவர்கள்' என வரிசைப்படுத்தி உள்ளார்.

ஓரளவு சிறந்தவர்கள் தியோடர் ரூஸ்வெல்ட், ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் கே. போல்க், குரோவர் கிளீவ்லேண்ட் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை முன்னிலைப்படுத்தி பட்டியல்

முன்னாள் அதிபர்களான ரீகன், கென்னடி போன்ற பல முக்கியத் தலைவர்களின் பெயர்களைப் பட்டியலில் புறக்கணித்துவிட்டு தன்னை முதன்மைப்படுத்தியுள்ள ட்ரம்பின் இந்த விவரிப்பு உலக அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பல அதிபர்கள்ப பெயர் தவிர்ப்பு

பட்டியலில் ரொனால்ட் ரீகன், டிவைட் ஐசனோவர் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் போன்ற முக்கிய குடியரசுக் கட்சி அதிபர்களின் பெயர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன.

டிரம்ப் இதற்கு முன்பும் நாடாளுமன்ற உரைகளில் தனது ஆட்சிக் காலத்தை "அமெரிக்காவின் பொற்காலம்" என்றும், உலகப் போர்களைத் தடுத்த உலகளாவிய தலைசிறந்த தலைவர் என்றும் தன்னைத்தானே புகழ்ந்து பேசியுள்ளார்.

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in