உச்சத்தில் தங்கம் : அதிக இருப்பு வைத்திருக்கும் டாப் 10 நாடுகள்

Top 10 Gold Reserve Country: தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள், 2 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்படும் நிலையில், அதிக அளவில் தங்கத்தை இருப்பு வைத்திருக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலை பார்ப்போம்.
price of gold expected to reach 2 lakhs by the end of this year, let's take a look at the list of top 10 countries with the largest gold reserves
price of gold expected to reach 2 lakhs by the end of this year, let's take a look at the list of top 10 countries with the largest gold reservesGoogle
1 min read

வரலாற்று உச்சத்தில் தங்கம் :

Top 10 Gold Reserve Country in the World 2026 : தங்கம் விலை புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டு வருகிறது. ராக்கெட் வேக விலையேற்றம், சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி, தங்கத்தை வாங்கவே முடியாத நிலை வருகிறது. தொடர் விலையேற்றம் இருந்தால் சவரன் ரூ.2 லட்சத்தை தொடும் போலத் தெரிகிறது.

தங்கத்தை குவிக்கும் நாடுகள்

இதை முன்கூட்டியே கணித்து சீனா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்து அதிக இருப்பு வைத்திருக்கும் நாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

டாப் 10 நாடுகள்

டாப் 10 நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் நெதர்லாந்து உள்ளது. 612.45 டன் தங்கம் கையிருப்பு(top 10 gold reserve country in the world 2026) வைத்துள்ளது.

9ம் இடத்தில் ஜப்பான் உள்ளது. அந்தநாடு 846 டன் தங்கம் கையிருப்பு வைத்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

8வது இடத்தில் இந்தியா

அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 8ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிடம் சுமார் 879.6 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6வது இடத்தில் சீனா

சுவிட்சர்லாந்து 7ம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 1,039.9 டன் தங்கம் கையிருப்பு வைத்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனா 6ம் இடத்தை பிடித்துள்ளது. சீனாவிடம் சுமார் 2,294.5 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

5வது இடத்தில் ரஷ்யா

அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 5ம் இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவிடம் சுமார் 2,329.6 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் 4ம் இடத்தை பிடித்துள்ளது. பிரான்சிடம் சுமார் 2,437 டன் தங்கம் கையிருப்பு உள்ளது.

3வது இடத்தில் இத்தாலி

அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி 3ம் இடத்தை பிடித்துள்ளது. இத்தாலியிடம் சுமார் 2.451.8 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

2வது இடத்தில் ஜெர்மனி

ஜெர்மனி 2ம் இடத்தை பிடித்துள்ளது. ஜெர்மனியிடம் சுமார் 3351.5 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

முதலிடத்தில் அமெரிக்கா

இறுதியாக, உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவிடம் சுமார் 8,133.5 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில்(World Gold Council) தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in