புலிட்சர் விருது எதற்காக வழங்கப்படுகிறது
அமெரிக்க செய்தியாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இதழியல், இலக்கியம், உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதானது அறிவிக்கப்பட்டு வருகிற்து
இந்த அண்டு புலிட்சர் விருது பெரும் இந்தியர்கள்
அதன்படி இந்த ஆண்டு , இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்கே, சுபர்ணா சர்மா என்ற இரு செய்தியாளர்களுக்கு பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது ?
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக, ‘‘டிராப்டு’’ என்ற பெயரில் முன்னணி ஊடகத்தில் விழிப்புணர்வு கார்ட்டூன் தொடர் வெளியானது. இந்த படைப்புக்காக ஆனந்த் ஆர்கே, சுபர்ணா சர்மா மற்றும் ஜப்பானை சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்சனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
செய்தியாளர்க்ளின் பின்னணி
டெல்லியை சேர்ந்த செய்தியாளர் சுபர்ணா சர்மா, அல் ஜெசீரா, பிபிசி, இந்து குழுமத்தின் பிரன்ட்லைன் இதழ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
சுபர்ணா. ஜப்பானை சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்சன் பிரதமர் மோடியின் அரசியல் வளர்ச்சி குறித்துஅவர் எழுதிய செய்திகள், கட்டுரைகள் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் ஆர்கே
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த ஆனந்த் ஆர்கே, இந்திய கடற்படை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்காக புதுமையான கலை படைப்புகளை உருவாக்கி கொடுத்திருபவரே இந்த ஆனந்த்.
============