Russian President Vlmdir Putin Praises India : மோடியுடனான உரையாடலை பகிர்ந்து பாராட்டு!

இந்தியாவின் பழமையான நாகரிகம் மற்றும் பல்வேறு மொழிகள் குறித்து பாராட்டி பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியுடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடலையும் பகிர்ந்துள்ளார்...
Putin Praises India's Linguistic Diversity, Recalls Conversation With PM Modi
Putin Praises India's Linguistic Diversity, Recalls Conversation With PM ModiAi Generated
1 min read

மோடியுடன் நடந்த உரையாடலைப் பகிர்ந்த புதின் :

இந்தியாவின் மொழி வேற்றுமை குறித்துப் பேசிய புதின், பிரதமர் நரேந்திர மோடியுடன் சமீபத்தில் நடந்த உரையாடல் ஒன்றையும் நினைவுகூர்ந்துள்ளார்.

அப்போது இந்தியாவில் எத்தனை பேர் முக்கிய மொழியைப் பேசுகிறார்கள் என்று பிரதமர் மோடியிடம் கேட்டதாகவும், அதற்கு சுமார் 60 கோடி பேர் என்று அவர் பதிலளித்ததாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு என்று கேட்டபோது, சுமார் 150 கோடி என மோடி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மொழி வேற்றுமையை பாராட்டிய புதின் :

இதைக் கேட்ட புதின், இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே அந்த முக்கிய மொழியை பேசுவதாகவும், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களுடைய சொந்த மொழிகளைப் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்படுவது ஆச்சரியமான விஷயம் என்றும், இந்தியாவின் மொழி வேற்றுமை வியக்க வைப்பதாகவும் புதின் பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் ஒற்றுமையை பாராட்டிய புதின் :

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ்வது தனித்துவமான விஷயம் என்று புதின் பாராட்டியுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இருப்பது இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பழமையான நாகரிகத்தின் மீது ஆர்வம்:

இந்தியாவின் வரலாறு மற்றும் நாகரிகம் குறித்து தனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளும்போது பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவின் மொழி வேற்றுமை மற்றும் கலாச்சார சிறப்புகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருப்பதாகவும் தனது பாராட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.

=======================