

ஈரான் போரால், அசாதாரண சூழல்
Qatar's gas production terminal, devastated by Iran attack, could take 5 years to recover : ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்தி வரும் தாக்குதல் 21 வது நாளாக நீடிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நீடிக்கிறது.
திரவ எரிவாயு முனையம் தாக்குதல்
உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) முனையம் கத்தாரில் உள்ளது. ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உற்பத்தி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பற்றி எரியும் திரவ எரிவாயு முனையம்
இதை நம்பியே இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த முனையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்த, அங்கிருக்கும் வயல்கள் பற்றி எரிகின்றன. தொழிற்பேட்டையில் உள்ள இயந்திரங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளன.
இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு
ராஸ் லஃப்பான் (Ras Laffan) பகுதி உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி முனையமாக விளங்குகிறது. இங்கிருந்தே இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 40% முதல் 45% வரை இறக்குமதி செய்கிறது. இதனால் இந்தியாவுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
எரிவாயு விலை அதிகரிப்பு
ராஸ் லஃப்பான் மீதான இந்த தாக்குதலால், சர்வதேச சந்தையில் LNG விலை ஒரே நாளில் 12% உயர்ந்துள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போரில் கத்தார் நடுநிலை வகித்த போதிலும், ஈரான் நடத்தி இருக்கும் தாக்குதல், உலக நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரிசெய்ய 5 ஆண்டுகள் ஆகும்
ஈரானின் தாக்குதலால் திரவ எரிவாயு முனையம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இந்தச் சேதங்களைச் சரிசெய்ய 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும், அதுவரை குறைந்த அளவே திரவ எரிவாயு உற்பத்தி இருக்கும் என்றும் ராஸ் லஃப்பான் நிறுவனம் விளக்கம் அளித்துது.
பார்ஸ் வயல்கள் எரிப்பு
உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்பு கொண்ட ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எரிவாயு வயல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காது நிலையில், இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியதோடு, அதற்கு பதிலடியாக கத்தார் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
==============