

இன்று மாலை நடைபெறும் குவாட் மாநாடு :
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் குவாட் (Quad). இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 17) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்திய நேரப்படி மாலை சுமார் 4 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகள், வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், மோடி டிரம்ப் இடையே தனிப்பட்ட சந்திப்பு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மணிலாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக நவம்பர் 12ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த தனிப்பட்ட சந்திப்புக்கான நேரம் மற்றும் நிகழ்ச்சி நிரல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
குறிப்பா, இந்த மாநாட்டைதொடர்ந்து டிரம்ப் சீனாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.
இதற்கு முன்னதாக குவாட் தலைவர்கள் ஒன்றுகூடுவது சர்வதேச அரசியல் பார்வையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் டெலாவேரில் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது.
அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தலைவர்கள் நேரடியாகச் சந்திக்க உள்ளனர்.
மேலும், டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் குவாட் தலைவர்கள் மாநாடு இதுவாகும்.
====