

டிரம்பின் முழக்கத்திற்கு முற்றுப்புள்ளி
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, 'நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை இழந்தால், அமெரிக்க வரலாற்றின் மிகக் கொடூரமான 'Mr. Veto' ஆக உருவெடுப்பேன்' என்று டிரம்ப் முழங்கினார்.
சரிந்து போன செல்வாக்கு
ஆனால், அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பினை தெளிவாக எழுதி இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். மக்களின் தெளிவான முடிவு, அதிபர் டிரம்ப்பின் செல்வாக்கு சரிந்து போய் கிடப்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி உள்ளது.
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும், 36 மாகாண ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
ஜனநாயக கட்சி 259, குடியரசு கட்சி 176
இன்று காலை நிலவரப்படி, 435 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 367 இடங்களில் ஜனநாயகக் கட்சி 228 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. ஆளும் குடியரசு கட்சி 139 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.
ஜனநாயக கட்சி 259 இடங்களையும், குடியரசு கட்சி 176 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிகிறது.
செனட்டை கைப்பற்றிய ஜனநாயக கட்சி
செனட் சபையில் தேர்தல் நடைபெற்ற 35 இடங்களில், முடிவு அறிவிக்கப்பட்ட 33 தொகுதிகளில் 20 இடங்களை ஜனநாயகக் கட்சி வென்றது.
இதன் மூலம் செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் பலம் 54 ஆக உயர்ந்து பெரும்பான்மை கிடைத்துள்ளது.
குடியரசு கட்சி 44 இடங்களில் வென்று பெரும்பான்மையை இழந்து இருக்கிறது.
22 மாகாணங்களில் ஜனநாயக கட்சி வெற்றி
36 மாகாணங்களுக்கு நடைபெற்ற ஆளுநர் தேர்தலில் 22 மாகாணங்களில் ஜனநாயகக் கட்சியும், 12 மாகாணங்களில் குடியரசு கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய வம்சாவளியினர் வெற்றி
அமெரிக்க இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பலரும் வெற்றிபெற்று அசத்தி வருகின்றனர். உதாரணமாக வெர்ஜீனியாவில் சுஹாஸ் சுப்பிரமணியம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
போலவே புளோரிடாவில் இந்திய வம்சாவளி பியா தாண்டியா வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசு கட்சியின் கோட்டைகள் தகர்ப்பு
டிரம்ப் கட்சி பல இடங்களிலும் இறங்குமுகத்தில் உள்ளது. குடியரசுக் கட்சியின் கோட்டையான தென் கரோலினா தகர்ந்துள்ளது.
ஜார்ஜியாவிலும் 28 ஆண்டுகளுக்குப் பின் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது.
100 ஆண்டுகளுக்குப் பின்னர் டெக்ஸாஸையும், 94 ஆண்டுகளுக்குப் பின்னர் கன்சாஸையும் வசப்படுத்தி உள்ளது ஜனநாயகக் கட்சி.
இந்த வெற்றியின் மூலம், டெக்ஸாஸின் கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் முதலாவது லத்தினோ (Latina - மெக்சிகன் அமெரிக்க வம்சாவளி) பெண் ஆளுநராக ஜீனா ஹினோஜோசா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
1998-க்கு பிறகு ஜார்ஜியா ஆளுநர் பதவியைக் கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி. இதில் குடியரசுக் கட்சியின் பில்லியனர் வேட்பாளர் ரிச் ஜாக்சனை தோற்கடித்து, அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பினப் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெறுகிறார் கேஷா லான்ஸ்.
================